»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஒரு தலைமுறையின் வரலாறு அப்படியே தலை கீழாகத் திரும்பியிருக்கிறது. போன தலைமுறையில் அண்ணன் கொடி கட்டிப் பறந்தார், தம்பி அமைதியாகஒதுங்கியிருந்தார். ஆனால் இந்தத் தலைறையிலோ, கதை அப்படியே மாறியிருக்கிறது.

இசைஞானியின் இசை வாரிசு என்று கூறும் அளவுக்கு தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. சமீப காலமாக வந்த நல்ல பாடல்களில்பெரும்பான்மையானவை யுவனின் இசை வண்ணத்தில் உருவானவை தான்.

யுவனுக்கு முன்பாக பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட கார்த்திக் ராஜாவை ஆளையே காணவில்லை.

ஆனால், யுவனின் கதை அப்படி இல்லை. அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் வந்த படங்களில் நந்தா, ஏப்ரல் மாதத்தில், மெளனம் பேசியதே ஆகிய சூப்பர் ஹிட் படங்களிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அட்டகாசம்செய்துள்ளது.

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் படப் பாடல்கள் கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்போது முன்னணி நாயகர்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு ரெகுலர் இசையமைப்பாளர் ஆகிவிட்டார் யுவன். இவரிடம் பிரண்ட் மாதிரிப் பேசி வேலைவாங்க முடிவதாக இளைய தலைமுறை நடிகர்களும் இயக்குனர்களும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.

கொசுறு: வைரமுத்துவின் மகன் கபிலனையும், யுவன் ஷங்கர் ராஜாவையும் இணைந்து பணியாற்ற வைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil