»   »  2014 பிளாஷ்பேக்: நீ ரொம்ப பேசற! கொஞ்சம் அடக்கிவாசி!!

2014 பிளாஷ்பேக்: நீ ரொம்ப பேசற! கொஞ்சம் அடக்கிவாசி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கையை காலை ஆட்டி... சொல்ல வந்த விசயத்தை பாதி மென்னு முழுங்கி... தமிங்கலீசில் புரிந்தும் புரியாமலும் பேசுபவர்கள்தான் சில தொகுப்பாளர்களும், தொகுப்பாளினிகளும் பேசுவதை விட கையை, காலை ஆட்டி நடனமே ஆடிவிடுவார்கள்.

தொகுப்பாளினிகளின் அடுத்த டார்கெட் சீரியல்தான், அதற்கடுத்து சினிமா இப்படித்தான் இருக்கும். ஆனால் சீரியலில் இருந்து சினிமாவிற்குப் போய் மீண்டும் தொகுப்பாளினிகளாக மாறியவர்களும் இருக்கின்றனர்.

அதேபோல பிரபல நடிகைகளும் கூட நிகழ்ச்சி தொகுப்பாளினிகளாக களம் இறங்கியிருக்கின்றனர். நடுவர்களாக வருபவர்கள் கூட சில சமயம் அதிகமாக பேசி தொகுப்பாளர்களுக்கான பணியை செய்து விடுவார்கள். அவர்களுக்கு ஒரு எபிசோடிற்கு லட்சக்கணக்கில் கொட்டி கொடுக்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலைக்கு டாடா காட்டியவர்களும், புதிதாக தொகுப்பாளினி அவதாரம் எடுத்தவர்களும் இருக்கின்றனர். இந்த ஆண்டில் ரசிகர்களுக்குப் பிடித்த தொகுப்பாளினிகளைப் பற்றியும், சில நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களாக வந்தவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்களேன்.

ஐஸ்வர்யா – தீபக்

ஐஸ்வர்யா – தீபக்

சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியின் செம போட்டி செம லூட்டி அடித்த தொகுப்பாளர்கள்தான் ஐஸ்வர்யா, தீபக். இவர்கள் பேசும் போதே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்வதாக கூறுகின்றனர். இதில் தீபக் சினிமா ஹீரோவாகிவிட்டார். இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது.

அதேபோல சன் குடும்பத்திற்குப் பின்னர் திருமணத்திற்காக சிலகாலம் இடைவெளி விட்டவர் பைரவி சீரியலில் மட்டுமே கவனம் செலுத்தினார். தற்போது மீண்டும் சன் சிங்கர் சீசன் 3 தொகுப்பாளராகி அதே உற்சாகத்தோடு பேசி வருகிறார். ரொம்ப பேசுபவர்கள் லிஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளனர் இவர்கள்.

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

எந்த ஒரு நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் பங்கேற்றாலும் அந்த நிகழ்ச்சி களை கட்டும். அதுவும் சூப்பர் குடும்பத்தின் நடுவராக வந்த டி.ராஜேந்தர்தான் அந்த நிகழ்ச்சிக்கே ஹைலைட் என்கின்றனர் ரசிகர்கள்

ஒஸ்தி சித்ரா

ஒஸ்தி சித்ரா

மக்கள் டிவியில் தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளராக இருந்த சித்ரா, சன் டிவியின் ‘ஒஸ்தி'யில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். ‘ஒஸ்தி காமெடி குஸ்தி' என்று அவர் ஆடும் நடனம்தான் பிரபலமானது. ஆடிக்கொண்டே பேசுவது தனி மேனரிசமாகிவிட்டது சித்ராவுக்கு. சில வாரங்களிலேயே அந்த நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்திவிட்டனர். இப்போது அதே நேரத்தில் சின்னப்பாப்பா பெரியபாப்பாவில் நடிகையாகிவிட்டார் சித்ரா.

பிரஜீன் – மகேஸ்வரி

பிரஜீன் – மகேஸ்வரி

சன் மியூசிக் தொகுப்பாளர்களான பிரஜீன், மகேஸ்வரி சீரியல், சினிமா என்று களத்தை மாற்றினார்கள். பெரிய துறை இருவருக்குமே கை கொடுக்கவில்லை என்பதால் மீண்டும் சின்னதுறைக்கே நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகிவிட்டனர். சிம்ரனின் ‘டான்ஸ் தமிழா டான்ஸ்' லிட்டில் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இருவருமே அசத்தல் தொகுப்பாளர்கள் என்பது ரசிகர்கள் கருத்து

ஆர்த்தி

ஆர்த்தி

மக்கள் டிவியில் அழகிய தமிழ் மகளாய் இருந்தவர் ஆர்த்தி சன்டிவியில் மாடர்ன் டிரஸ் மங்காத்தாவாக மாறி ‘சூரியவணக்கம்', ‘புதுப்படம் எப்படியிருக்கு' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இவரது தமிழ் உச்சரிப்பும் குழந்தை தனமான பேச்சும்தான் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம்.

ஈரோடு மகேஷ் – பாலாஜி

ஈரோடு மகேஷ் – பாலாஜி

கலக்கப்போவது யாரு மூலம் சின்னத்திரைக்கு வந்த ஈரோடு மகேஷ், நிகழ்ச்சித் தொகுப்பாளராகிவிட்டார். நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என்று கூறி இவரும் பாலஜியும் அடிக்கும் லூட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளதாம்.

பீச் கேர்ள்ஸ் கல்யாணி

பீச் கேர்ள்ஸ் கல்யாணி

குட்டிப்பெண்ணாய் சினிமாவில் நடிப்பை தொடங்கி, சீரியல், நிகழ்ச்சி தொகுப்பு என்று சின்னத்திரையில் காலூன்றிய கல்யாணி, சினிமாவில் ஹீரோயினாக நடிக்கப் போனார். ஆனால் தமிழ் திரை உலகம் அவருக்கு கை கொடுக்கவில்லை. மீண்டும் சீரியலுக்கே திருமணம். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனாலும் பீச் கேர்ள்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை புதுப்பொலிவுடன் தொகுக்க வந்து விட்டார். முன்பை இப்போ கூடுதல் கவர்ச்சி என்கின்றனர் ரசிகர்கள்.

திவ்யதர்சினி

திவ்யதர்சினி

விஜய் டிவியின் டெலி அவார்ட்ஸ்சில் இந்த ஆண்டின் சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய கையோடு திருமணம் செய்து கொண்டார் திவ்யதர்சினி. ஜோடி நிகழ்ச்சியின் தொகுப்பாளர், தற்போது காபி வித் டிடி சீசன் 2 தொகுத்து வழங்குகிறார். பேசி பேசியே சிறப்பு அழைப்பாளர்களை கதறடிக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

நீலிமா ராணி

நீலிமா ராணி

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சீரியலில் அழுது அழுது நடித்து, சில சீரியல்களில் வில்லத்தனம் செய்த நீலிமா ராணி, தற்போது ‘அழகிய சிநேகிதி' நிகழ்ச்சி மூலம் இந்த ஆண்டில் தொகுப்பாளினியாக மாறியுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பு என்பது ஒரு கலை. இன்னமும் அவருக்கு அது கைவரவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

மோனிகா

மோனிகா

வானிலை அறிக்கை சொன்ன மோனிகா, திருமணம் செய்து கொண்டு சீரியஸாக செட்டில் ஆனார். குழந்தை கொஞ்சம் வளரவும், சீரியலில் நடிக்க வந்து விட்டார். தற்போது வேந்தர் டிவியில் ‘சா பூ த்ரி' என்ற குழந்தைகள் நிகழ்ச்சியை மழலைக்குரலில் தொகுத்து வழங்கிறார்.

நிஷா கிருஷ்ணன்

நிஷா கிருஷ்ணன்

சூரிய வணக்கம் சொன்ன பொண்ணு நிஷா, இப்போ வேந்தர் வீட்டு கல்யாணத்தில் ரிஷியுடன் கலக்கிக்கிட்டு இருக்காங்க. டீலா நோ டீலா சொன்ன ரிஷியின் உற்சாகத்தோடு போகிறது வேந்தர் வீட்டு கல்யாணம்.

அர்ச்சனா

அர்ச்சனா

காமெடி டைம் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களைப் பெற்ற அர்ச்சனா, இப்போது விஜய் டிவியில் நம்ம வீட்டுக்கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கொஞ்சம் இடைவெளிக்கும் பின்னர் டிவியில் தோன்றினாலும் அந்த துள்ளல் பேச்சு அப்படியேதான் இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

சன்டிவியின் சூரியவணக்கம், சுட்டி டிவி என நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த பிரியங்கா தேஷ்பாண்டேவின் ஓய்வில்லாத பேச்சு அவரை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக மாற்றியுள்ளது.

ரோஜா

ரோஜா

சினிமா நடிகை, அரசியல்வாதி, ஆந்திரா சட்டசபையில் கலக்கல் எம்.எல்.ஏவாக வலம் வரும் ரோஜா, ஜீ தமிழில் லக்கா கிச்சா சீசன் 2 தொகுப்பாளராக அதே ஆட்டம், பாட்டம் உற்சாகத்துடன் வலம் வருகிறார். ரோஜா ரோஜாதான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

குஷ்பு

குஷ்பு

சீரியல், சினிமா அரசியல், என பிஸியாக இருக்கும் குஷ்பு ஜீ தமிழ் டிவியில் நம்ம வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சியை அசத்தலாக தொகுத்து வழங்கினார். இப்போது வேந்தர் டிவியில் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். குஷ்பு என்றாலே தனி ஸ்பெசல்தான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

சிநேகா

சிநேகா

சினிமா, விளம்பர படங்கள் மட்டும் போது சின்னத்திரை வேண்டவே வேண்டாம் என்று கூறிய சிநேகா புதுயுகம் டிவியில் மேளம் கொட்டு தாலிகட்டு நிகழ்ச்சியை புது மணப்பெண்ணின் உற்சாகத்தோடு தொகுத்து வழங்கிறார். இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தா நல்லா இருக்குமே என்கின்றனர் ரசிகர்கள்.

சங்கீதா

சங்கீதா

தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த சங்கீதா புதுயுகம் டிவியில் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிரபல நட்சத்திரங்களை பேட்டி கண்ட சங்கீதா இப்போது விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சியில் மீண்டும் நடுவராகிவிட்டார்.

English summary
Here is the List of top TV Anchor on 2014 in Tamil satellite channels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil