»   »  பொங்கல் ஸ்பெசல்: ஆரம்பம், வருத்தப்படாத வாலிபர் சங்கம்… பாண்டியநாடு…

பொங்கல் ஸ்பெசல்: ஆரம்பம், வருத்தப்படாத வாலிபர் சங்கம்… பாண்டியநாடு…

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு புத்தம் புதிய படங்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றனர்.

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உற்சாகமான பண்டிகை. போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் புத்தம் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்.

அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லாவும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின்றன. அதேபோல சின்னத்திரையிலும் தல, தளபதி மோதல் உள்ளது. பொங்கல் பண்டிகை நாளில் சின்னத்திரையில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களைப் பற்றி ஒரு சின்ன ரவுண்ட் அப்.

ஆரம்பம்

ஆரம்பம்

அஜீத், நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஆரம்பம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆன ஆரம்பம் பொங்கல் பண்டிகைக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

தலைவா

தலைவா

விஜய், அமலாபால் நடித்த தலைவா சன் டிவியில் ஜனவரி 14ம் தேதி ஒளிபரப்பாகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

சிவகார்த்திக்கேயன், ஸ்ரீ திவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் கலைஞர் டிவியில் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகிறது.

ராஜா ராணி

ராஜா ராணி

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி திரைப்படம் விஜய் டிவியில் பொங்கல் சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாகிறது. அதோடு விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

பாண்டியநாடு

பாண்டியநாடு

விஷால், லட்சுமி மேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் பாண்டியநாடு ராஜ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா

விமல், பிந்துமாதவி சூரி நடித்த தேசிங்குராஜா திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்

சிறப்பு நிகழ்ச்சிகள்

புத்தம் புதிய திரைப்படங்கள் மட்டுமல்லாது நடிகர், நடிகையர்களின் பேட்டிகள், சினிமா சூட்டிங் ஸ்பாட் என பணத்தை அள்ளி இறைத்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகின்றன தொலைக்காட்சி சேனல்கள்.

English summary
For Pongal all the leading Tamil Channels will air the movies and for this year 2014 all the latest movies are planned to be premiered on the Channels. Ajith's blockbuster Arrambam on Jaya TV, Vijay's blockbuster Thalaiva on SUN TV, Raja Rani on Vijay TV, Varuthapadatha Vaalibar Sangam on Kalaingar TV, Pandiya Naadu on Raj TV, Desingu Raja & 6 on Zee Tamil channel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil