»   »  சீரியல் டிஆர்பிக்காக ஆள் கடத்தல், தலைமறைவு 2016லாவது முடிவுக்கு வருமா?

சீரியல் டிஆர்பிக்காக ஆள் கடத்தல், தலைமறைவு 2016லாவது முடிவுக்கு வருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல் டல்லடித்தாலோ, போர் அடித்தாலோ, சீரியலில் சில திருப்பு முனைக்காக காட்சிகளை புகுத்துவார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் கடும் துயரில் சிக்குவது போலவும், சிக்கலில் மாட்டிக்கொள்வது போலவும் காட்சிகள் அமைப்பார்கள்.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போலவும், உயிர் போகும் தருணத்தில் இருந்து மீண்டு வருவது போலவும் காட்சிகள் அமைக்கப்படும். இப்போதோ டிஆர்பிக்காக பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஆள் கடத்தல், குற்றவாளிகள் தலைமறைவு, ஆள்மாறாட்டம் செய்வது போல காட்சிகள் வைக்கப்படுகின்றன.

பிரியமானவள் போலீஸ் டிசி கிரி

பிரியமானவள் போலீஸ் டிசி கிரி

பிரியமானவள் டிவி சீரியல் வில்லன் போலீஸ் டிசி கிரிக்கு, கிருஷ்ணன், உமா குடும்பத்தை கொலை செய்ய வேண்டும் என்பதுதான் குறிக்கோள். சீரியல் சில வாரங்களாகவே டல் அடிக்கவே, சிறையில் இருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்க்கிறார். பணத்திற்காக கிருஷ்ணனை கடத்தினார்கள். இப்போது தலைமறைவாக உள்ள கிரி எப்போது, எப்படி கிருஷ்ணனை கொலை செய்யப் போகிறாரோ என்ற எண்ணத்திலேயே ரசிகர்களை சீரியல் பார்க்க வைக்கின்றனர். 2016 இறுதிக்குள் டிசி கிரியை போலீஸ் பிடித்து விடுமா? கிருஷ்ணன் தப்புவாரா? என்பதுதான் கேள்வி.

15 கோடி கிடைக்குமா?

15 கோடி கிடைக்குமா?

கிருஷ்ணனிடம் இருந்து வாங்கிய 15 கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ள கும்பல் பணத்தை இடம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். கிருஷ்ணன் குடும்பத்திற்கு கூடவே இருந்து குழிபறிக்கும் கும்பல், அந்த 15 கோடியை கிருஷ்ணனுக்கு கிடைக்க விடுவார்களா. 2017ம் ஆண்டுவரைக்கும் இன்னும் ஒரு 370 எபிசோடுகள் வரைக்கும் 15 கோடி கதையை ஓட்டுவார்களா என்பதே கேள்வி.

வாணி ராணியில் தலைமறைவு

வாணி ராணியில் தலைமறைவு

வாணி ராணி சீரியலில் ராணியின் கணவர் சாமிநாதன் தலைமறைவாகிவிட்டார். ராணி குடும்பத்தினர் சாமிநாதனை தேடி வர, அவரோ, வீட்டு ஆட்களைப் பார்த்தாலே மறைந்து வாழ்க்கிறார். ஜெயிலில் இருந்து தப்பிய ஆர்யாவை தேடி அலைகிறார் கவுதம். சிறையில் இருந்து தப்பி வந்து அசால்டாக இரண்டு கொலைகளை செய்து விட்டு சுற்றி வருகிறார். எப்போது பிடிக்கப் போகிறார்களோ?

குல தெய்வம் அருணாசலம்

குல தெய்வம் அருணாசலம்

குலதெய்வம் தொடரில் குடும்பத்தலைவர் அருணாசலத்தை லட்சக்கணக்கான பணத்தோடு கடத்தி விட்டார்கள். போலீஸ் ஒருபக்கம் தேட, அவரது மகள் அலமுவின் கணவரும் ஒரு பக்கம் தேடி வருகிறார்கள். 100 எபிசோடுகளாக அருணாசலத்தை தேடி வருகின்றனர். கொலையைப் பார்த்த ஹன்சிகாவின் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.

கழுத்தறுபட்ட மகன்

கழுத்தறுபட்ட மகன்

சீரியலில் கூட கழுத்தறுப்பு சீன்கள்தான் அதிகம் வைக்கிறார்கள். குலதெய்வத்தில் அருணாசலத்தின் மகள் வயிற்று பேத்தியின் படிப்பு தன்னால் கெட்டு விட்டதே என்று கழுத்தை அறுத்துக்கொண்டு படுத்திருக்கிறான் கேசவ் மகன். அவன் பிழைப்பானா? கொலையாளிகள் சிக்குவார்களா? 40 லட்சம் ரூபாயை கார் கம்பெனியில் இருந்து திருடிக்கொண்டு தலைமறைவான நண்பனை கண்டு பிடிப்பார்களா? அது எத்தனை எபிசோடுகள் நீளும் என்பதே கேள்வி.

ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம்

ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம்

தெய்வமகள் தொடரில் நம்பியை கடத்தி கொலை செய்த காயத்திரி, ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரத்தை தேடுகிறாள். பென்னியிடம்தான் அந்த பத்திரம் இருக்கிறது என்று தெரியவரவே, அவனது மனைவியை இப்போது தேடுகின்றனர். 2017 வந்தாலும் ஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரத்தை காயத்திரி கண்டுபிடித்து விடுவாளா? நம்பியை கடத்தி கொலை செய்த காயத்திரி போலீசில் சிக்குவாளா? இன்னும் எத்தனை எபிசோடுகள் காயத்திரியை பத்திரத்தை தேடி ஓடவிடுவார்கள்?

நோகடிக்கும் நந்தகுமார்

நோகடிக்கும் நந்தகுமார்

2016ம் ஆண்டில் டிவி சீரியல் ரசிகர்களை அதிகம் நோகடித்தது நந்தகுமார்தான். தினம் ஒரு வேடமிட்டு வந்து மூளை நினைவுச் செல்களை அழிப்பது, வாழைப்பழம் சாப்பிட்டு பழைய நினைவு வந்தால் அவர்களை ஊசி போட்டு தன் கஷ்டடியில் வைப்பது என 150 எபிசோடுகளாக இதே கதைதான் ஜவ்வாக இழுக்கிறது. நந்தகுமார் கடத்திக் கொண்டு போன சபரீஷ், ஜோதிகாவை 2017ம் ஆண்டாவது மீட்பார்களா? நந்தகுமாரை கலெக்டர் அர்ச்சனா எப்போது கைது செய்து சிறையில் அடைப்பார், வம்சம் சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்பதே டிவி சீரியல் ரசிகர்களின் கேள்வி.

English summary
TV serials trp ratings Vamsam, Vani Rani and Deivamagal in Sun TV serials 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil