»   »  தை பொங்கலுக்கு சன் டிவியில் பாபநாசம், ஜீ தமிழில் கத்துக்குட்டி...

தை பொங்கலுக்கு சன் டிவியில் பாபநாசம், ஜீ தமிழில் கத்துக்குட்டி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

தை பொங்கல் திருநாளில் சன் டிவியில் பாபநாசம் ஒளிபரப்பாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தனி ஒருவன் திரைப்படமும், புலி படமும் கூட தை திருநாளில் ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை என்றாலே நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கலும், கரும்பும் பிரதானம். பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே கையில் ரிமோட் உடன் டிவி சேனல் முன்பு அமர்வது வாடிக்கையான நிகழ்வுதான். நடிகர்கள், நடிகையர்களின் பேட்டி, சின்னத்திரை கலைஞர்களின் கொண்டாட்டம், சிறப்பு பட்டிமன்றங்கள் என அமர்களப்படும்.

புத்தம் புதிய திரைப்படங்களையும் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்புவது டிவி சேனல்களின் வழக்கம். இந்த ஆண்டு எந்த சேனல்களில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் என்று சில சேனல்களில் மட்டுமே முன்னோட்டம் போட ஆரம்பித்துள்ளன.

இந்த ஆண்டு பொங்கல் திரைப்பட விளம்பர முன்னோட்டத்தில் முந்திக்கொண்டது ஜீ தமிழ் டிவி. எப்போதுமே இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று சன் டிவியில்தான் முன்னோட்டம் அமர்களப்படும். ஆனால் ஜீ தமிழ் சேனலில் பொங்கல் பண்டிகை சிறப்புத் திரைப்படத்திற்கான முன்னோட்டங்கள் ஒளிபரப்பாகின்றன.

திரிஷா இல்லைன்னா நயன்தாரா

திரிஷா இல்லைன்னா நயன்தாரா

ஜி.வி பிரகாஷ் கயல் ஆனந்தி நடித்த படம் திரிஷா இல்லைனா நயன்தாரா ஜீ தமிழ் டிவியில் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளது. இது கடந்த ஆண்டு இளம் ரசிகர்களை கவர்ந்த படம், டிவி ரசிகர்களைக் கவருமா? டிஆர்பி எகிறுமா என்பதை பார்க்கலாம்.

கத்துக்குட்டி

கத்துக்குட்டி

நரேன், ஸ்ருஷ்டி டாங்கே நடித்த கத்துக்குட்டி திரைப்படம் ஜனவரி 16ம் தேதி ஒளிபரப்பாகிறது. கத்துக்குடி பாரட்டுக்களை பெற்ற படம் டிவி ரசிகர்களையும் கவரும் என்று நம்பலம்.

பாபநாசம்

பாபநாசம்

கமல், கவுதமி நடித்த பாபநாசம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் வெற்றி பெற்ற படம். பொங்கல் தினத்தன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

மூன்று நாட்கள் விடுமுறை

மூன்று நாட்கள் விடுமுறை

இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு பள்ளிகளில் தேர்வு வைத்து விட்டனர். வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே விடுமுறை. மூன்று நாட்களும் திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அமர்களப்படும். ஒரு சில படங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளன. இன்னும் ஜெயா டிவி, ராஜ் டிவி, பாலிமர், விஜய் டிவி , கலைஞர் டிவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள படங்களின் பட்டியலை வரும் நாட்களில் பார்க்கலம்.

English summary
All leading TV channels lined-up with blockbuster movies for this pongal season, with most of the movies were released and box office hits of last year, 2015.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil