»   »  காயத்ரியை இப்படி அலைய விட்டுட்டீங்களே - சன் டிவி தெய்வமகள்

காயத்ரியை இப்படி அலைய விட்டுட்டீங்களே - சன் டிவி தெய்வமகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரே ஜல்லிக்கட்டு வேணும்னு கேட்கறப்ப, டிவி சீரியல் பார்க்கணுமா என்று கேட்பது காதில் விழுகிறது. ஆனாலும் தெய்வமகள் சீரியலில் காயத்ரியை பார்க்காமல் நம்ம ஆட்களுக்கு சாப்பாடு இறங்காதே அவர்களுக்காகவே இந்த கட்டுரை.

கடந்த ஆண்டுகளில் கம்பீரமாக வலம் வந்த ஜெய்ஹிந்த் விலாஸ் மூத்த மருமகள் காயத்ரி அண்ணியார், இப்போது பாவம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட அடுத்தவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

என்னோட திருமண நாளுக்கு முன்னாடி உங்க எல்லோரையும் ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டை விட்டு விரட்டிட்டு என் கணவரோட நான் கம்பீரமாக வீட்டிற்குள் நுழைவேன் என்று காயத்ரி வீர வசனம் பேசிய காயத்ரியின் நிலைதான் இப்போது வீதிக்கு வந்து விட்டது.

துரத்தும் துயரம்

துரத்தும் துயரம்

இருக்க இடமில்லை, சாப்பிட உணவில்லை, அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வீதியில் சுற்றி வருகின்றனர் காயத்ரியும், வினோதினியும்.
பசி ஒரு பக்கம் விரட்ட, லிங்கம் ஒரு பக்கம் துரத்த ஓடி ஒளியும் நிலைதான் இப்போதைக்கு காயத்ரிக்கு.

தவிக்கும் காயத்ரி

தவிக்கும் காயத்ரி

தங்களை தேடி வந்த விபச்சார விடுதி பெண்ணிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள விடிய விடிய துர்நாற்றம் வீசும் பாத்ரூமிற்குள் நின்று கொண்டு தவிக்கும் காயத்ரியை காண்பவர்களுக்கு உனக்கு இதுவும் வேணும், இதற்கு மேலும் வேணும் என்று திட்டுகின்றனர்.

2 இட்லி போதுமே

2 இட்லி போதுமே

அக்கா ரொம்ப பசிக்குது.... 2 இட்லி மட்டும் போதும்கா என்று வினோதினி கெஞ்ச, வெட்கம், ரோசம் விட்டு சத்யாவின் அம்மாவிடம் போய் சாப்பாடு கேட்க, வினோதியின் நாத்தனார், இருவரையும் விரட்ட காயத்ரிக்கா இந்த நிலைமை என்று கேட்கின்றனர் அவரது ரசிகர்கள்.

நல்லா வேணும்

நல்லா வேணும்

கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சத்யாவை விரட்டி விரட்டி வேட்டையாடிய காயத்ரிக்கு இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் பேசி மேலும் சாபம் விடுகின்றனர். இருக்க இடம் கிடைத்தால் போதுமே என்று யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு கந்தசாமியின் மனைவி மூலம் ஒரு வெளிச்சம் தெரிந்திருக்கிறது.

வேலை கிடைக்குமா?

வேலை கிடைக்குமா?

ஸ்டார் ஹோட்டல் ஜி.எம்., நம்பி குரூப் கம்பெனி எம்டி என்று கம்பீரமாக வலம் வந்த காயத்ரிக்கா இந்த நிலைமை என்று ரசிகர்கள் உச்சு கொட்டினாலும், ஒரு வேலையாவது கிடைக்குமா? என்று ஏங்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் லிங்கத்தின் நண்பர் கம்பெனியாக இருப்பதால் காயத்ரிக்கு அங்கேயும் சிக்கல்தான்.

கட்டம் சரியில்லையோ?

கட்டம் சரியில்லையோ?

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரியலில் கம்பீரமாக வலம் வந்த காயத்ரிக்கு இப்போது கட்டம் சரியில்லையோ? ஒருவேளை சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி முடிந்த பின்னர் நிலைமை சீரடையுமா? அல்லது இதே நிலைதான் நீடிக்குமா?

பிரகாஷ், சத்யாவிற்கு புது வில்லன்கள்

பிரகாஷ், சத்யாவிற்கு புது வில்லன்கள்

காயத்ரியின் நிலை பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல உள்ளதால் சீரியலின் டிஆர்பியை கூட்ட புது புது வில்லன்களை அறிமுகம் செய்திருக்கின்றனர். நம்பி, வெள்ளியங்கிரி கொலையில் காயத்ரி கைது செய்யப்படுவாளா? லிங்கத்திடம் இருந்து தப்புவாளா? சத்யாவிற்கு லிங்கத்தினால் புது சிக்கல் எதுவும் வருமா என்ற பல கேள்விகளுடன் பயணிக்கிறது தெய்வமகள்.

English summary
Deivamagal Gayathri showing vengeance, greedy, spoil others and a woman can easily topple any man and can reach any levels fro millionaire business man, government officials, Politicians, Police viewers said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil