»   »  7ம் உயிரில் முதல் உயிரை பழிவாங்க வந்திருக்கும் தீயசக்தி… வெல்லுமா இறைசக்தி…

7ம் உயிரில் முதல் உயிரை பழிவாங்க வந்திருக்கும் தீயசக்தி… வெல்லுமா இறைசக்தி…

Posted By:
Subscribe to Oneindia Tamil

அத்தைன்னாலே வில்லிதான் என்ற ஒரு அடையாளத்தை புகுத்திவிட்டன டிவி சீரியல்கள். இப்போது அத்தை வடிவில் ஒரு பேயை அறிமுகப்படுத்துகின்றனர் 7ம் உயிர் டிவி சீரியலில். இது பேய்களின் காலம் என்பதால் டிவி

வேந்தர் டிவியில் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய திகில் நெடுந்தொடர் "7ம் உயிர்". வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கும் ஏழு இளம்பெண்களை கொள்வதற்கு தேடி அலையும் ஒரு தீய சக்தியின் சாகசங்கள் நிறைந்த இந்த தொடர் மர்மமும் பரபரப்பும் நிறைந்த ஒரு அமானுஷ்ய கதை.

தீயசக்தியின் ஆட்டம்

தீயசக்தியின் ஆட்டம்

தற்போது முதல் உயிரை பலி வாங்க அத்தை உருவில் வந்திருக்கும் அந்த தீய சக்தி. அந்த பெண்ணின் உயிரை பலி கொள்ளுமா? என்ற பரபரப்பான கட்டத்தை நோக்கி திரைக்கதை அருமையான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.

இறை சக்தி காக்குமா?

இறை சக்தி காக்குமா?

ஒவ்வொரு இளம்பெண்களை கொன்று ,இறுதியில் ஏழாவது உயிரை கொன்றால் அசாத்திய சக்தி கிடைக்கும் என்ற அந்த தீய சக்தியின் எண்ணம் நிறைவேறுமா?இறைசக்தி எதாவது தோன்றி அந்த பெண்களை காப்பாற்றுமா?எதிர்பார்போடு செல்கிறது.

திகில் தொடர்

திகில் தொடர்

மதுரை, சரவணன் மீனாட்சி, பாசமலர் என குடும்ப தொடர்களை இயக்கி வந்த அழகர் 7ம் உயிர் திகில் தொடரை இயக்கியுள்ளார். லஷ்மி, சூசன், ஜீவா ரவி, ஆகியோர் நடித்துள்ளனர். திகில் திருப்பங்கள், திடுக்கிட வைக்கும் இசை என புதிய கோணத்தில் எடுத்துள்ளார் அழகர்

பேயாக சூசன்

பேயாக சூசன்

வில்லியாக சீரியலில் கலக்கி வரும் சூசன் இதில் பேயாக வருகிறார். அந்த சேலை கட்டும்... பெரிய பொட்டும் சூசனுக்கு அசத்தல் என்கின்றனர் ரசிகர்கள்.

எப்ப எல்லாம் பயமுறுத்துவாங்க

எப்ப எல்லாம் பயமுறுத்துவாங்க

ஒரே எபிசோட் ஒரு தடவை இல்லை... இரண்டு தடவை இல்லை மூன்று முறை வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்க்காமல் விட்டவர்கள், இரவு 10.00மணிக்கும்,மறுநாள் மதியம் 1.00மணிக்கும் பார்க்கலாம்.

English summary
7m uyir horror tele serial is telecasting on Monday to Friday at 7 P.M retelecast at 10 P.M watch on Vendhar TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil