»   »  'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா ரசிகாஸ்: உங்களுக்கு ஒரு 'குட் நியூஸ்'

'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா ரசிகாஸ்: உங்களுக்கு ஒரு 'குட் நியூஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போகும் கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியாவுக்கு விஜய் டிவி நிர்வாகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாம்.

விஜய் டிவியில் எத்தனையோ நெடுந்தொடர்கள் ஒளிப்பரப்பானாலும் கல்யாணம் முதல் காதல் வரை தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதற்கு காரணம் தொடரின் நாயகி ப்ரியா. ப்ரியா, ப்ரியா என்று ரசிகர்கள் கொண்டாடி வந்த நேரத்தில் அவர் அந்த தொடரில் இருந்து விலகினார்.

இந்த செய்தி அறிந்து ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.

ப்ரியாவை காணோமே

ப்ரியாவை காணோமே

கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியாவை காணவில்லையே என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அப்பொழுது தான் அவர் அந்த தொடரில் இருந்து விலகியதன் காரணம் தெரிய வந்தது.

திருமணம்

திருமணம்

ப்ரியா ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் ராஜவேலை காதலித்து வருகிறார். அவரை விரைவில் திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

கல்யாணம் ஆனால் என்ன ப்ரியா தொடர்ந்து நடிங்க ப்ளீஸ் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். எத்தனையோ பேர் திருமணத்திற்கு பிறகும் நடிக்கவில்லையா, நீங்க திரும்பி வரணும் என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய் டிவி

விஜய் டிவி

ப்ரியாவை காணாமல் ரசிகர்கள் புலம்புவதை பார்த்த விஜய் டிவி நிர்வாகம் அடடா இவருக்கு இவ்வளவு மவுசா என்று வியந்திருக்கிறது. இதையடுத்து திருமணத்திற்கு பிறகும் நீங்கள் நடிப்பை தொடர வேண்டும் என ப்ரியாவுக்கு விஜய் டிவி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.

முடிவு

முடிவு

மீண்டும் நடிக்க வருவதும், இல்லை ஒரு தடவை முடிவு செஞ்சா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என சொல்வதும் ப்ரியாவின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay TV administration is reportedly requesting Kalyanam Mudhal Kadhal Varai Priya to continue acting even after wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil