»   »  இனி கல்யாணம், குழந்தை கூட “இ.எம்.ஐ”தான்- ஐ.டி துறையின் நிஜத்தை உணர்த்தும் புதிய தொடர்!

இனி கல்யாணம், குழந்தை கூட “இ.எம்.ஐ”தான்- ஐ.டி துறையின் நிஜத்தை உணர்த்தும் புதிய தொடர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் டிவி சீரியல் என்றாலே அழுகையும், ஒப்பாரியும் மற்றும் கள்ளக்காதல்களும்தான் என்றாகி விட்டது.

அந்தளவிற்கு காலை முதல் இரவு வரையில் அழுகையும், கோவமும், பிரச்சினைகளும் நிறைந்த சீரியல்கள் வரிசை கட்டி நிற்கும்.

அப்படிப்பட்ட நிலையில்தான் அழுக்காச்சிகளுக்கு நடுவில் எஞ்சினியரிங், ஐடி துறை வாழ்க்கையில் சிக்கி மாதத் தவணை கட்ட முடியாமல் போராடும் மக்களின் கதையை புதிய கோணத்தில் காட்டும் வகையில் புதிய சீரியல் ஒன்றினை ஒளிபரப்பி வருகின்றது சன் டிவி.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு:

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு:

"இ.எம்.ஐ - தவணை முறை வாழ்க்கை" என்பதுதான் அந்த சீரியலில் பெயர். சின்னத்திரை சீரியல்கள் வரலாற்றில், கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் சீரியல்களைத் தயாரித்துவரும் நிறுவனம் என்கிற பெருமை கொண்டது விகடன் டெலிவிஸ்டாஸ்.

தவணை முறை வாழ்க்கை:

தவணை முறை வாழ்க்கை:

விகடன் குழுமத்தின் ஓர் அங்கமாக இருக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான கோலங்கள், திருமதி செல்வம், தென்றல், அழகி, தெய்வமகள், பிரியமானவள் என்கிற வெற்றி சீரியல்கள் வரிசையில் விருந்து படைக்க வந்திருக்கிறது "இஎம்ஐ - தவணை முறை வாழ்க்கை" தொடர்.

ஐ.டி துறைதான் கதைக்கரு:

ஐ.டி துறைதான் கதைக்கரு:

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகும் இஎம்ஐ தொடர், ஐ.டி துறையில் வேலை செய்யும் நண்பர்களை மையமாகக் கொண்டது.

எல்லாமே இ.எம்.ஐ:

எல்லாமே இ.எம்.ஐ:

எல்லாவற்றையும் இ.எம்.ஐ என்னும் கடன் ரீதியிலாக வாங்கும் உலகில்தான் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஐ.டித்துறை கொட்டிக் கொடுக்கும் துறை என்பதைக் காட்டிலும் அது ஒரு மாய வலை என்பதை உணர்த்தி வருகின்றது.

கசக்கும் ஐ.டியின் மறுபக்கம்:

கசக்கும் ஐ.டியின் மறுபக்கம்:

ரேண்டம் முறையில் திடீரென்று வேலையை இழக்கும் நண்பன், அதனால் அவனுடைய தற்கொலை முயற்சி, தன்னுடைய தவணை, புகழ், இ.எம்.ஐ சுயநலத்திற்காக டீமினைப் பிரிக்க முயலும் பிராஜெக்ட் மேனேஜர், சதா சர்வ காலமும் இன்கிரிமெண்ட் பற்றி பேசும் காதலி, சாப்பிடுவதே வாழ்க்கையாக நினைக்கும் நண்பன் என ஐடி துறையின் மற்றொரு பக்கத்தை எடுத்துக் காட்டி வருகின்றது இந்தத் தொடர்.

ஐ.டியா? அது ராஜபோகமான வாழ்க்கையாச்சே என்று நினைப்பவர்கள் தாராளமாக தினமும் இந்த சீரியலைப் பார்க்கலாம்.. உங்கள் கருத்துகள் மாறக் கூடும்.!

English summary
EMI is a new serial delcasting in Sun TV every day night 10.30.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil