twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவையற்ற லக்கேஜ்களை தலையில் சுமக்கமாட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

    By Mayura Akilan
    |

    A.R. Rahman
    நான் ஒரு கருவிதான். என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்றோ, தேவையற்ற லக்கேஜ்களையோ தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டேன். வெற்றிக்காக குதிப்பதோ, தோல்விக்காக வருத்தப்படுவதோ இல்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

    நேற்று இல்லாத மாற்றம்...

    தீபாவளி தினத்தில் ஊரெல்லாம் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த காலை நேரத்தில் ஜெயா தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பட்டாசு கொளுத்தினார்கள். பின்னணிப் பாடகி சின்மயி ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி கண்டார். அவருடன் பணியாற்றிய 5 இயக்குநர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

    ஏ.ஆர் ரஹ்மான் நல்ல மனிதர்

    இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை மிகச் சிறந்த மனிதராக உணர்கிறேன் என்று கூறினார் இயக்குநர் வசந்த். ரிதம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் வேலை பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் வசந்த். இந்த பிறவியில் என்னை திறமையானவனாக கடவுள் என்னை படைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறியது தனக்கு பிடித்திருந்ததாக வசந்த் கூறினார்.

    பக்குவமாக வாழ வேண்டும்

    நியூ, அன்பே ஆருயிரே, படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார் எஸ்.ஜே.சூர்யா. வாழ்க்கையை எப்படி பக்குமாக அணுகவேண்டும் என்பதை ஏ.ஆர் ரஹ்மானிடம் கற்றுக் கொண்டதாக கூறினார் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா.

    நட்புடன் இணைந்த இசை

    காதல்தேசம், காதலர் தினம் படங்களுக்கு இசை அமைத்தவிதம் பற்றி இயக்குநர் கதிர் பகிர்ந்து கொண்டார். இதேபோல் இயக்குநர்கள் பிரவீண், கிருஷ்ணா ஆகியோர் ஏ.ஆர். ரஹ்மான் உடனான நட்பை நேயர்களிடையே பகிர்ந்து கொண்டனர். இதேபோல் பின்னணிப் பாடகி சித்ரா, பாடகர் ஸ்ரீனிவாசன், பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் ஏ.ஆர். ரஹ்மானிடன் கேள்விகளை கேட்டனர்.

    புதிய பாடகர்களின் அறிமுகம்

    பேட்டியின் போது ஓரு கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், புது பாடகர்களுக்கு நான் வாய்ப்பு குடுத்தேன் என்பதை விட அவர்களிடம் இருந்து நான் என்ன எடுத்துக்கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்று கூறினார். புதிய குரலில் ஒரு பாடலை கேட்கும் போது அது ரசிகர்களுக்கு பிடிக்கிறது. இதுவே பாடலின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறினார்.

    இன்னும் நல்லா இருந்திருக்கலாமோ?

    கடிவாளம் கட்டிய குதிரையாகத்தான் என் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது. நான் தந்தையாக, கணவனாக, மகனாக, சகோதரனாக சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்று நினைத்திருக்கிறேன். என்னை விட என் பசங்க நல்லா படிக்கிறாங்க. குழந்தைகளுக்கு நாம் உதாரணமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

    லக்கேஜ் வேண்டாமே...

    எப்படி இவ்ளோ புகழ் கிடைச்சும் ஆர்பாட்டம் இல்லாம அமைதியா இருக்கீங்க? என்று கேட்டதற்கு, என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று நான் நினைக்கமாட்டேன். இந்த செயல் நடப்பதற்கு நான் ஒரு கருவியாக இருக்கேன் என்று மட்டுமே நினைப்பேன் என்றார் ரஹ்மான். தேவையற்ற லக்கேஜ்களை நான் சுமப்பதில்லை அதுதான் இந்த அமைதிக்குக் காரணம் என்றார்.

    மனிதாபிமானம் முக்கியம்

    ஆத்மாவை பின்னால் விட்டுவிட்டு நீ மட்டும் ஓடாதே. ஆத்மாவையும் சேர்த்துக் கொண்டு ஓடவேண்டும். மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும்

    மனிதாபிமானம் மிகவும் முக்கியம். நம்மை யாரும் பார்க்கவில்லை. எனவே நாம் எதையும் செய்யலாம் என்று செய்யக்கூடாது.

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுகிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். அப்பொழுதுதான் யாரும் தவறு செய்ய நினைக்கமாட்டார்கள் என்ற செய்தியோடு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து நிகழ்ச்சியை இனிமே முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    English summary
    Netru Illatha Matram A.R. Rahman Special Interview telecasted on Jaya TV on November 13.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X