twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடிமாதம் அம்மன் பாடல்களை போட்டு அசத்திய மானட மயிலாட டீம்

    By Mayura Akilan
    |

    Maanada Mayilada
    ஆடிமாதம் என்றாலே தொலைக்காட்சிகளில் பக்தி திரைப்படங்கள் களைகட்டும். அதுவும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாடல்களில் கூட பக்திரசம் சொட்டும். அம்மன் பாடல்கள் போட்டு வேப்பிலை வைத்து ஆடிக்கொண்டிருப்பார்கள். அதே பாணியை பின்பற்றி டிஆர்பி ரேட்டிங்களை ஏற்றிக்கொண்டது மானட மயிலாட டீம்.

    நடனப்போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் அம்மன் சிலை செட் போடப்பட்டு கோவில் திருவிழா போல சீரியல் செட் செய்யப்பட்டிருந்தது.நடனப் போட்டியில் பங்கேற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆடியது அனைத்துமே அம்மன் பாடல்கள்தான். மஞ்சள், சிவப்பு புடவை கட்டிய பெண்கள் குலவை போட்டு, அக்னிச்சட்டி எடுத்து, தீ மிதித்து அமர்களப்படுத்திவிட்டனர். நிகழ்ச்சியைய் பார்த்து எத்தனைபேர் வீட்டில் சாமி வந்து ஆடினார்களோ தெரியாது.

    நிகழ்ச்சியின் நடுவர்களான நடன இயக்குநர் கலா, நமீதா, குஷ்பு ஆகியோரின் உடை அலங்காரம் வித்தியாசமான கெட் அப்பில் இருக்க நிகழ்ச்சித்தொகுப்பாளகளின் உடையோ அதைவிட அமர்களமாக ஜிகு ஜிகு என்று இருந்தது. அதுவும் நடுவராக இருந்த குஷ்பு 'தாலி வரம்' என்ற பாடலுக்கு செய்த ஆக்ஷன் அட்டகாசம். பேசாமல் அவரே ஆடியிருக்கலாம். மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தீம் எடுத்து அதன் படி செட் அமைக்கப்பட்டிருக்கும். ஆடி மாதம் என்பதால் கடந்த ஞாயிறு அன்று அம்மன் பாடல்களைப் போட்டியாளர் தேர்தெடுந்தது ரசிக்கும் படியாக இருந்தது.

    English summary
    Aadi Amman Special in Maanada Mayilada dance show last Sunday
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X