»   »  அச்சுறுத்தும் ரியாலிட்டி ஷோக்கள்... டிஆர்பிக்காக ஏன் இந்த கொலை வெறி...

அச்சுறுத்தும் ரியாலிட்டி ஷோக்கள்... டிஆர்பிக்காக ஏன் இந்த கொலை வெறி...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டிஆர்பிக்காக நிறைய நாடகத்தனங்கள் அரங்கேறி வருகின்றன. சின்னத்திரை நடிகர்கள் பங்கேற்கும் அச்சம் தவிர், மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடீஸ் நிகழ்ச்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கின்றன.

விளையாட்டு என்பது வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும், ஆனால் இப்போது டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் விளையாட்டு நிகழ்ச்சிகள் வினையாகி வருகின்றன.

விஜய் டிவியில் ஒரு புத்தம் புதிய அதிரடியான விளையாட்டு நிகழ்ச்சி அச்சம் தவிர், கடந்த ஜூன் 02ம் தேதி முதல் வியாழன் - ஞாயிறு இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

அச்சம் தவிர் நிகழ்ச்சியானது சின்னத் திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் வெள்ளி திரை நட்சத்திரங்களும் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் கடினமாணதாகவும், ரத்தம் வரக்கூடியதாகவும் இருக்கிறது.

நடிகைகள் பட்டாளம்

நடிகைகள் பட்டாளம்

பெண் நட்சத்திர போட்டியாளர்கள் நடிகை சோனியா அகர்வால், நடிகை காயத்ரி ஜெயராமன், நடிகை சஞ்சனா சிங், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் நாயகி- நடிகை காயத்ரி, நடிகை மதுமிலா, பிரியங்கா தேஷ்பாண்டே, ‘மெட்டி ஒலி' காயத்ரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர்கள் தொகுப்பாளர்கள்

நடிகர்கள் தொகுப்பாளர்கள்

ஆண் நட்சத்திர போட்டியாளர்கள் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் , மா கா பா ஆனந்த், நாடோடிகள் படத்தின் புகழ்- நடிகர் பரணி, சரவணன் மீனாட்சி புகழ் செந்தில், அமுதவாணன், சரவணன் மீனாட்சி புகழ் - சித்தார்த் மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை புகழ்- அமித் பார்கவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ரத்தக்களறிதான்

ஒரு மரத்தை ஒருவர் பிடித்துக்கொள்ள அதிலிருந்து விடுவித்து எல்லை கோட்டுக்கு அப்பால் தூக்கி வீசவேண்டும். பாவம் சஞ்சனா சிங் படாத பாடு பட்டுப்போனார். கணேஷ் வெங்கட்ராமன் முகத்தில் காயம் பட்டு ரத்தமே வந்து விட்டது.

மயக்கம் வந்திருச்சேப்பா

மயக்கம் வந்திருச்சேப்பா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடீஸ் நிகழ்ச்சியில் அதை விட கொடூரமான போட்டிகளை வைத்தனர். பெண் போட்டியாளர்கள் வயிற்றில் கயிறை கட்டிக்கொண்டு இழுப்பதுதான் போட்டி. ஆள் ஆளுக்கு இழுக்க வயிறு வலியால் துடிக்க கடைசியில் காயத்ரிக்கு மயக்கமே வந்து விட்டது.

திகில் போட்டி

இதையெல்லாம் விட இனி பேய் பங்களாவில் அழகு நாயகிகளை அலர வைத்து அச்சுறுத்துகிறார்கள். சீரியல், சினிமாவில்தான் பேய் கதை என்றால் ரியாலிட்டி ஷோவிலும் கூட பேய் பங்களாவில் போய் படப்பிடிப்பு நடத்தி பார்வையாளர்களை அச்சுறுத்துகின்றனர்.

ஈஸியான போட்டி

இதை தனியாக செய்து பார்க்க வேண்டாம் என்று வேறு கீழே போடுகிறார்கள். சின்னத்திரை நட்சத்திரங்களும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்கும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் இது போன்ற கொடுமையான போட்டிகளை தவிர்த்து விட்டு ஈஸியான, காமெடியான போட்டிகளை வைக்கலாமே என்பதுதான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

English summary
Zee Tamil TV Mr&Mrs Killadies and Vijay TV Acham Thavir reality shows are TRP competition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil