»   »  நடிக்க வாய்ப்பில்லை... வாழப் பிடிக்கவில்லை... தற்கொலைக்கு முயன்ற ‘நாதஸ்வரம்’ சாய்சக்தி

நடிக்க வாய்ப்பில்லை... வாழப் பிடிக்கவில்லை... தற்கொலைக்கு முயன்ற ‘நாதஸ்வரம்’ சாய்சக்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாதஸ்வரம் தொலைக்காட்சித் தொடரில் நடித்த சாய் சக்தி, தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது. தமிழ் சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் சாய் பிரசாத் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழ் சின்னத்திரை நடிகர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் சாய் சக்தி. இவர் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பரவியது. அதில், வாழ வழியில்லை என அவர் அழுதபடி பேசி இருப்பது டிவி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த ஆடியோவில் சாய் சக்தி பேசியிருப்பதாவது:-

தற்கொலை முடிவு...

தற்கொலை முடிவு...

வணக்கம் நான் நடிகர் சின்னத்திரை சாய் சக்தி பேசுகிறேன். உங்கள் எல்லோருக்கும் தெரியும் நான் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில், தொடர்களில் படங்களில் நடித்திருக்கிறேன். நான் மிகவும் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யும் அளவுக்கு வந்து விட்டேன். காரணம் இரண்டு வருடமாக என் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன்.

சாய்பிரசாத் தற்கொலை...

சாய்பிரசாத் தற்கொலை...

எனக்கென்று உதவி செய்ய யாரும் வரல. காரணம் என்ன என்று நினைக்கிறீங்க... இன்று டி.வி. கலைஞர்கள் நிறைய பேர் இறந்து கொண்டே இருக்கிறோம். கஷ்டத்தில் இருந்த சாய்பிரசாத் இறந்து விட்டார். அடுத்தது சாய்சக்தி நிலைமை என்னன்னு கேளுங்க.

நடுத்தெருவில் நிற்கிறேன்...

நடுத்தெருவில் நிற்கிறேன்...

மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு, மனசு ரொம்ப வலிக்குது. நான் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறேன். நாதஸ்வரம் என்ற தொடரில் நடித்தேன். பின்னர் இன்னொரு டி.வி.யில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு சென்றேன். தொடர்ந்து வாய்ப்பு அளிப்பதாக அவர்கள் உறுதி கூறினார்கள். ஆனால் என்னை ஏமாற்றி மூளைச்சலவை செய்து குழப்பி இன்று என்னை நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

வருமானமில்லை...

வருமானமில்லை...

இன்று எனக்கு வருமானம் இல்லை. என்னை நம்பி மனைவி, குழந்தை குடும்பம் இருக்கிறது. இவர்களுக்கு யார் உதவி செய்வார்கள். நான் என்ன செய்வேன். இப்போது நான் நடுத்தெருவில் நிற்கிறேன். 17 வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். முதலில் நடித்த டி.வி.யிலும் பின்னர் நான் சென்ற டி.வி.யிலும் பல முறை படியேறி வாய்ப்பு கேட்டேன். காலில் விழுந்து கதறி அழுதேன். பிச்சை எடுக்காத குறையாக படியேறி இறங்கினேன்.

தற்கொலை முயற்சி...

தற்கொலை முயற்சி...

ஒரு நடிகர் நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இதனால் மனம் நொந்து தற்கொலை முயற்சியில் இறங்கி சாக முயன்றேன். ஆனால் அதை என் அம்மா தடுத்து என்னை அடித்து அப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

நாங்கள் ஏழை...

நாங்கள் ஏழை...

எனக்கு தொடர்ந்து வாய்ப்பு இல்லை. வருமானம் இல்லை. வாழப் பிடிக்கவில்லை. மீண்டும் தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நீங்கள் தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு நடிப்புதான் சாப்பாடு போடும் என்று நினைத்தேன். இந்த டி.வி.க்களை நம்பி இன்று பல கலைஞர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். நாங்கள் ஏழை. டிப்பு தான் எங்கள் தொழில், அதை நம்பிதான் கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தோம். இப்போது கடைசியில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா?

வாழ வழியில்லை...

வாழ வழியில்லை...

எனக்கு இந்த உலகத்துல வாழ்வதற்கே இஷ்டம் இல்லேங்க (கதறி அழுகிறார்) சத்தியமா சொல்றேங்க எனக்கு லைப் இனி தேவை இல்லை. என்னால முடியல்ல. டி.வி.காரர்களை நம்பி செத்தே போயிட்டேன்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்திருந்தார்.

கவுன்சிலிங்...

கவுன்சிலிங்...

வைரலாக பரவிய இந்த ஆடியோவைக் கேட்ட சின்னத்திரை நடிகர்கள் சிலர், சாய் சக்தியை அவரது சகோதரி மூலம் தொடர்பு கொண்டனர். பின்னர் அவருக்கு உரிய கவுன்சிலிங் வழங்கி, அவரைத் தற்போது தற்கொலை முடிவில் இருந்து அவர்கள் மாற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Tamil serial actor Sai Sakthi has tried to commit suicide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil