»   »  ஊரும் உணவும்... புதியதலைமுறையில் தொகுப்பாளரான ஸ்ருதி நகுல்

ஊரும் உணவும்... புதியதலைமுறையில் தொகுப்பாளரான ஸ்ருதி நகுல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு ஊர் உணவுக்கும் ஒரு ருசி இருக்கிறது. அந்த ஊருக்கு சென்றால் மட்டுமே அந்த உணவுகளை ருசிக்க முடியும். புதியதலைமுறையில் "ஊரும் உணவும்" எனும் புதிய நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சுவைப்பிரியர்களுக்காக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

உணவுகளை அந்தந்த ஊர்களுக்கு சென்று சுவை மாறாமல் வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இந்த நிகழ்ச்சியை நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தொகுத்து வழங்குகிறார். நகுலும் ஸ்ருதியும் கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்குப் பின்னர் முழு நேர நிகழ்ச்சித் தொகுப்பாராகி விட்டார் ஸ்ருதி.

ஊரும் உணவும்

ஊரும் உணவும்

ஊரும் உணவும் நிகழ்ச்சி இந்த வாரம் முதல் இளமைத் துள்ளலுடன் புதுவடிவமெடுத்திருக்கிறது.பார்த்தவுடன் தொற்றிக் கொள்ளும் சிரிப்புடன், தன் கைபட்டவுடன் சுவைக்கத்தூண்டும் உணவு சமைக்கிறார் உற்சாகமான இளம் செஃப் ஸ்ருதி நகுல்!

பாண்டிச்சேரி பாரம்பரிய ருசி

பாண்டிச்சேரி பாரம்பரிய ருசி

இந்த வாரம் பாண்டிச்சேரியின் சாலைகளில், கிராமப்புறங்களில் அவர் மக்களோடு மக்களாகக் கலந்து அவர்களின் பாரம்பரியச் சுவையை உலகறியச் செய்கிறார்.
ஸ்ருதியுடன் இணைந்து ஊர் ஊராகச் சென்று புத்துணர்வோடு வரலாறு படித்துக்கொண்டே சுவையின் இரகசியங்களைக் கண்டு சுவைப்போம்.

சுவை பிரியர்களுக்கு உணவு

சுவை பிரியர்களுக்கு உணவு

தேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் ஊர் ஊராக சுவையின் இரகசியங்களை தேடித்தரும் இந்த நிகழ்ச்சியை மடோனா ஜனனி தயாரிக்க புதியதலைமுறை தொலைகாட்சி வழங்குகிறது.

சமையல் ரசிகர்களுக்கு

சமையல் ரசிகர்களுக்கு

சமையல் நிகழ்ச்சியை எத்தனை முறை ஒளிபரப்பினாலும் ரசிப்பார்கள். புதியதலைமுறையில் ஊரும் உணவும் நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சுவைப்பிரியர்களுக்காக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

English summary
Actor Nakul's wife, Sruti is all set to jazz up the cookery show titled Oorum Unavum, which is aired on Puthiya Thalamurai. Sruti will quote literary and historical references as she talks about different dishes during the show.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil