Just In
- 5 min ago
சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!
- 1 hr ago
ஸ்கேட்டிங் கற்க போய் கையை உடைத்துக்கொண்ட ஜெனிலியா.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
இப்படி போஸ் கொடுத்தா.. பசங்க பாவம் இல்லையா.. கிராப் டாப்பில் இடுப்பை காட்டி கதற விடும் ஈஷா ரெப்பா!
- 1 hr ago
பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்யணும்.. நடிகை ஷாலு ஷம்மு பரபரப்பு குற்றச்சாட்டு!
Don't Miss!
- News
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக - விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு
- Finance
டாடா-வின் அடுத்த அதிரடி.. ஜஸ்ட் டயல் நிறுவனத்தைக் கைப்பற்றத் திட்டம்..!
- Automobiles
மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!
- Lifestyle
பெண்களே! ரொம்ப நேரம் முத்தம் கொடுத்து உங்க காதலனை இன்பத்தில் திளைக்க வைக்க இப்படி பண்ணுங்க...!
- Sports
ஐபிஎல்-லிலும் எதிரொலித்த விவசாயிகள் போராட்டம்... பிசிசிஐ நடவடிக்கை.. பஞ்சாப் முதல்வர் அதிருப்தி
- Education
JEE Main Exam Result 2021: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Senthoorappoove Serial: செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... ரஞ்சித் பூ கிடைச்சுதா?
சென்னை: விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்று ஒரு சீரியலை அந்த டிவி புதிதாக ஒளிபரப்ப இருக்கிறது. மிக விரைவில்னு போட்டு ப்ரோமோ போட்டு வருகிறார்கள். இதில் நடிகர் ரஞ்சித் நடித்து இருக்கார். நாயகி செந்தூரப்பூ வேண்டும் என்று கேட்க, நாயகன் செந்தூரப்பூவைத் தேடிப் போகிறார்.
சிந்து நதி பூ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். இவர் நடிகர் மம்முட்டியுடன் நடித்த மறுமலர்ச்சி படம் ரஞ்சித்துக்கு நல்ல புகழைத் தேடித் தந்தது. சின்ன கலைவாணர் விவேக்குடன் இவர் நடித்த பசுபதி மே/பா ராசக்கா பாளையம் படத்தின் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.
பசுபதி மே/பா ராசக்கா பாளையம் படத்தில் பசுபதியாக நடித்து இருக்கும் ரஞ்சித்தின் அம்மா உருண்டை சாதம் பிடித்து தருவார். இதை விவேக் உட்பட அனைவரும் சாப்பிட முடியாமல் திணற ரஞ்சித் மிக அழகாக சாப்பிட்டு முடிப்பார்.இப்படி படங்களில் நடித்து அனைவர் மனதிலும் இடம்பெற்ற ரஞ்சித், இப்போது விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியல் மூலம் சின்னத் திரைக்கு வர இருக்கிறார்.

செந்தூரப்பூவே இருக்குதா?
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்கிற இனிமையான பாடலுக்கு இளையராஜா இசை அமைத்து இருக்க, கங்கை அமரன் பாடல் எழுதி இருப்பார். செந்தூரப்பூவே என்று ஒரு பூவே இல்லை, இது கற்பனைப் பூ என்றும் பின்னர் விளக்கமும் அளித்து இருந்தார் கங்கை அமரன். ஆனால், இந்த பெயரில் நிரோஷா, ராம்கி நடிச்சு இருக்க செந்தூரப்பூவே என்று ஒரு படமும் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படி இந்த கற்பனையான பூவின் பெயரில் விஜய் டிவியில் சீரியல் ஒன்றும் ஒளிபரப்பாக உள்ளது.
Eeramana Rojaave Serial: கால் ஸ்லிப்பாகி கன்னத்துல லிப் ஆயிருச்சாமே... அப்டீன்னா?

அந்நியன் ரெமோ மாதிரி
செந்தூரப்பூவே சீரியலின் நாயகனாக ரஞ்சித் நடித்து இருக்க, நாயகியாக கலர்ஸ் தமிழ் டிவியின் தறி சீரியலில் அன்னம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிச்சு இருக்கார். இவர் ரஞ்சித்திடம் செந்தூர பூ வேண்டும் என்று கேட்க, ஊரெல்லாம் செந்தூரப்பூவைத் தேடி அலையும் ரஞ்சித்துக்கு ஒரு பெண்மணி செந்தூரப்பூ என்பது கற்பனைப் பூ என்று சொல்றாங்க.பூ கிடைக்காமல் வீட்டுக்கு வரும் ரஞ்சித்திடம் செந்தூரப்பூ கிடைச்சுதா என்று கேட்க, செந்தூரப்பூ கிடைக்கலை. ஆனால், வேற பூ கிடைச்சுது என்று கூறும் ரஞ்சித், அவரை அழைத்து வந்து கதவைத் திறக்க, அந்நியன் படத்தில் ரேமோ நந்தினிக்கு பூ பரிசு கொடுத்த மாதிரி ஒரே பூத்தோட்டம்.

போட்டா போட்டியில் சானல்கள்
ஜீ தமிழ் டிவி வயதானாலும் காதல் வரும் என்கிற கான்செப்டில் தூய துறையிலும் காதல் வருமே என்று நீதானே என் பொன் வசந்தம் என்று ஒரு சீரியலை ஒளிபரப்ப உள்ளது. அதன் ப்ரோமோ வெளியாகி வரும் இந்த நேரத்தில் விஜய் டிவியும் காதலிக்க வயதில்லை, காதலுக்கும் வயதில்லை என்று இதே கான்செப்டை கையில் எடுத்து, நடிகர் ரஞ்சித்தை நடுத்தர வயதுக்குள்ளான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வச்சு, இளம் நாயகியாக ஸ்ரீநிதியை நடிக்க வச்சு இருக்கிறார்கள். இப்படி ஒரே கான்செப்டில் சீரியல்களை ஷூட் செய்து ஒளிபரப்ப விஜய், ஜீ தமிழ் டிவி சானல்கள் போட்டா போட்டியில் இருக்கின்றன.

சானல்களில் அதிகரிப்பு
சன் டிவி எப்போதுமே சீரியல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகிறது. இது சன் டிவியில் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கம். விஜய் டிவி குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பல ஆண்டுகளாக சீரியல்களை ஒளிபரப்பி வந்தது. ஜீ தமிழ் டிவி கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒரு சில சீரியலை ஒளிபரப்பி வந்தது. இப்போது அனைத்து சானல்களுமே சீரியல்களை ஒளிபரப்பும் நேரத்தை அதிகரித்து வருகின்றன.