»   »  மாட்டுப்பொங்கல் நாளில் விஜய் டிவியில் சிவகுமாரின் மகாபாரதம் சொற்பொழிவு

மாட்டுப்பொங்கல் நாளில் விஜய் டிவியில் சிவகுமாரின் மகாபாரதம் சொற்பொழிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கம்பராமாயணத்தை 'கம்பன் என் காதலன்' என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் பேருரை நிகழ்த்திய ஆடியோ, சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது 'மகாபாரதம்' தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் நிகழ்த்தியிருக்கிறார். அந்த உரை விஜய் டிவியில் வரும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

'கம்பராமாயணம்' இந்தியப் பெருங்கடல் போன்றது என்றால் 'மகாபாரதம்' பசிபிக் பெருங்கடல் போன்றது. கம்பராமாயணத்தை இரண்டே வரியில்கூட சொல்ல முடியும் மகாபாரதத்தை அப்படிச் சொல்ல முடியாது. அதில் ஏராளமான கதாபாத்திரங்கள், ஏராளமான கிளைக்கதைகள் உண்டு. மகாபாரதத்துக்கு தமிழில் உள்ள நூல்கள் பெரியவை. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, வில்லிப்புத்தூரார் எழுதியது, சோ எழுதிய மகாபாராதம் பேசுகிறது. போன்றவை அளவில் பெரியவை. இப்படி மகாபாரதம் பற்றி பல நூல்களை படித்து அதனை மாணவர்கள் மத்தியில் இடைவிடாமல் பேசியுள்ளார் சிவகுமார்.

Actor Sivakumar Mahabharatham Speech on Star Vijay Jan 16

பொய்மையும் வாய்மை இடத்து...பொய்யே சொல்லாத தர்மனை அஸ்வத்தாமன் என்ற யானைக்குள் பொய்யை புதைத்து துரோணாச்சாரியாரை கொன்ற சம்பவத்தை சிவகுமார் அருமையாக விளக்கியுள்ளார். பரதனால் பெயர் பெற்றது பாரதம். வாரிசு அரசியலின் இறுதிக் காட்சியை மகாபாரதக் கதை மூலமாக சிவகுமார் அழகாக இன்றைய அரசியல் காட்சிகளோடு ஒப்பிட்டு கூறியுள்ளார்.

மகாபாரதக் கதையை எத்தனை முறை டிவியில் ஒளிபரப்பினாலும், கதையாக சொன்னாலும் ரசிக்க தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சிவகுமார் நிகழ்த்திய மகாபாரத சொற்பொழிவு ஜனவரி 16 ஆம் தேதி சனிக் கிழமை மாலை 04 மணி முதல் 07 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மகாபாரத ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

English summary
Actor Sivakumar's Mahabharatham Speech telecast on Star Vijay TV January 16 Mattu Pongal Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil