»   »  வேந்தர் டிவியில் ஆர்த்தி வழங்கும் மை டியர் குட்டீஸ்...

வேந்தர் டிவியில் ஆர்த்தி வழங்கும் மை டியர் குட்டீஸ்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகை ஆர்த்தி சின்னக்குழந்தைகளை சிரிக்க வைக்க வேந்தர் டிவியில் மை டியர் குட்டீஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். விதவிதமான வேடங்களில் வந்து குழந்தைகளின் மனதை அள்ளிச் செல்கிறார் ஆர்த்தி.

சின்னக்குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. சன் டிவியில் இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கும் குட்டிச் சுட்டி, கோவை சரளா தொகுத்து வழங்கிய செல்லமே செல்லம் என வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

வேந்தர் டிவியில் குட்டீஸ்

வேந்தர் டிவியில் குட்டீஸ்

இந்த வரிசையில் வேந்தர் தொலைக்காட்சியில் புதியதாக "மை டியர் குட்டீஸ்" எனும் குழந்தைகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை தயாரித்துள்ளது இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மழலைகளுக்கு பரிசு

மழலைகளுக்கு பரிசு

இதில் நிகழ்ச்சியை நடிகை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார். 4 குழந்தைகள் பங்கு பெரும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி இதுவாகும். ஆர்த்தி கேட்கும் கேள்விகளுக்கு வேடிக்கையாகவும், அப்பாவியாகவும் பதிலளிக்கும் மழலைகளுக்கு இறுதியில் பரிசும் அளிக்கப்படுகிறது.

மூன்று சுற்றுக்கள்

மூன்று சுற்றுக்கள்

மூன்று சுற்றுகளில் முதல் சுற்று - அறிமுகம் மற்றும் பொது கேள்விகள், இரண்டாம் சுற்று -நிலைமை சுற்று, வேடிக்கை மற்றும் விளையாட்டு, மூன்றாவது சுற்று - பஞ்ச் வசனம், சினிமா பாடல்கள் , செய்தி,சமூகம் மற்றும் கூடுதல் திறமைகள் ஆகிய சுற்றுகள் கொண்ட ஒரு அரை மணி நேரம் நிகழ்ச்சி.

பெற்றோர்களுக்கு வாய்ப்பு

பெற்றோர்களுக்கு வாய்ப்பு

இந்நிகழ்ச்சியை பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக கண்டு ரசிக்கலாம். இதற்கும் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேந்தர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாலை 5,30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

அசத்தும் ஆர்த்தி

அசத்தும் ஆர்த்தி

சின்னத்திரை, சினிமா என காமெடியில் கலக்கிய ஆர்த்தி, மை டியர் குட்டீஸ் நிகழ்ச்சியில் அருக்காணி, சார்லி சாப்ளின், டோரா என பல்வேறு வேடங்களைப் போட்டு பிஞ்சு குழந்தைகளின் மனதைக் கவரும் வகையில் நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.

English summary
Actress Aarthi host new program My Dear Kutties on Vendhar TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil