twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்குக் கோபம் வந்தா புருஷனைப் போட்டு சாத்துவேன்.. 'குண்டு' ஆர்த்தி அதிரடி!

    By Mayura Akilan
    |

    பண்டிகை தினத்து தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பட்டிமன்றம் இடம் பெறவேண்டும் என்பது சம்பிரதாயமாகிவிட்டது. சன் டிவி தொடங்கி வசந்த் டிவி வரை காலை 10 மணிக்கு எந்த சேனலை திருப்பினாலும் பட்டிமன்றம்தான். சாலமன் பாப்பையா குழுவினர் தொடங்கி, லியோனி, ஞானசம்பந்தன், டெல்லிகணேஷ், தம்பிராமையா குழுவினர் வரை பிரபல சேனல்களில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.

    இளமையா? முதுமையா?

    இளமையா? முதுமையா?

    சன் டிவியில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவை நடுவராக கொண்ட குழுவினர் உதவி புரியும் மனப்பான்மையோடு இருப்பது இளைஞர்களா, முதியவர்களா என்ற தலைப்பில் பேசினார்கள். இருவேறு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர். நிகழ்ச்சியின் ஹீரோ வழக்கம் போல ராஜாதான். இவர் இளைஞர்களே என்ற தலைப்பில் பேசினார். முதியவர்கள் விளம்பரத்தை எதிர்பார்ப்பு உதவி செய்வார்கள். இளைஞர்கள் எதையும் எதிர்பார்க்காமல் செய்கின்றனர் என்று கூறினார். அவருக்கு எதிராக பேசிய பாரதி பாஸ்கர் இளைய தலைமுறையினரை உதவி செய்ய தூண்டுவதே முதியவர்கள்தான் என்று பதிலடி கொடுத்தார். இரண்டு குழுவினரையும் தன்னுடைய நகைச்சுவை பேச்சினால் சமாளித்தார் சாலமன் பாப்பையா.

    காதலா? கள்ளக்காதலா?

    காதலா? கள்ளக்காதலா?

    கலைஞர் டிவியில் ஐ. லியோனி குழுவினர், காதல் பற்றி நன்றாக கூறியுள்ளது பழைய திரைப்படத்திலா, புதிய திரைப்படத்திலா என்ற தலைப்பில் விவாதம் நடத்தினர். பழைய திரைப்படத்தில் காதல் கையாளப்பட்ட விதம் பற்றி பேசிய ஒருவர், துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி படம் வந்திருப்பதைப் போல காதல் படத்திற்குப் பதிலாக கள்ளக்காதல் என்ற படம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றால் ஏனெனில் இன்றைய திரைப்படங்களில் கள்ளக் காதல்தான் அதிகம் இடம் பெறுவதாக குற்றம் சாட்டினார்.

    பணம் இருந்தால் உறவா?

    பணம் இருந்தால் உறவா?

    ஜெயா டிவியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையிலான குழுவினர் உறவுகளைப் பற்றி சராமரியாக விவாதித்தனர். மரபு வழியில் கொண்டாடப்படும் விழாக்களைப் பற்றி அழகாக எடுத்துக்கூறினார் ஒருவர். உறவுகள் ஏற்படுவதே பணத்தை அடிப்படையாகக் கொண்டுதான். மாமன், மச்சான், அண்ணன், தம்பி ஆகிய உறவுகள் பணம் இருந்தால்தான் மதிப்பார்கள் என்று கூறி நிகழ்ச்சியை பார்ப்பவர்களை நெளிய வைத்தார் ஒருவர்.

    கணவரை போட்டு அடிப்பேன்

    கணவரை போட்டு அடிப்பேன்

    பாலிமர் டிவியில் நடிகர் டெல்லிகணேஷ் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடிகைகள் காவேரி, ஆர்த்தி கணேஷ்கர், நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்று நகைச்சுவையாக பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ஆர்த்தி, எனக்கு கோபம் வந்தால் கணவரைப் போட்டு நன்றா அடிப்பேன். இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். எனது புருஷனைத்தானே நான் அடிக்கிறேன். அதுக்குத்தானே எனக்கு ரைட்ஸ் கொடுத்திருக்காங்க என்று வெட்டவெளிச்சமாக, பட்டையைக் கிளப்பும் வகையில் பேசினார். மேலும் அவர் பேசுகையில், நான் கொடுக்கும் அடிகளை அவர் தாங்கிக் கொள்வார் அதனால்தான் எங்களிடையே காதல் மாறாமல் இருக்கிறது. இது எல்லார் வீட்டிலும் சகஜம்தான் என்று கூலாக சொன்னார் ஆர்த்தி. அடி ஆத்தீ...!

    விஜய் டிவியில் பேசிய சிவகுமார்

    விஜய் டிவியில் பேசிய சிவகுமார்

    வசந்த் டிவி, கேப்டன் டிவி, மெகா டிவி என எல்லா சேனல்களிலும் பட்டி மன்றம் ஒளிபரப்பிய நேரத்தில் விஜய் டிவி நடிகர் சிவகுமாரின் ‘நேருக்கு நேர்' நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. பெரும்பாலான சேனல்களில் 6 பேர் விவாதம் நடத்திக் கொண்டிருக்க விஜய் டிவியில் நடிகர் சிவக்குமார் ஒன்மேன் ஆர்மியாக தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலும் கூறி அசரவைத்தார்.

    மொத்தத்தில் பண்டிகை தினத்தில் காலை நேரத்தில் கண்டிப்பாக பட்டிமன்றம் அல்லது விவாத நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதை சம்பிரதாயமாக எல்லா டிவி சேனல்களுமே கடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் இதிலிருந்து தெரியவரும் உண்மை.

    English summary
    Actress Arthi who participated in a Diwali spl pattimandram in Polymer TV rocked the show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X