»   »  டிவி சீரியலில் மீண்டும் புவனேஸ்வரி..

டிவி சீரியலில் மீண்டும் புவனேஸ்வரி..

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

நடிகை புவனேஸ்வரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மசாலா குடும்பம் என்ற தொடரில் நடிக்கிறார். இந்த தொடரில் நடிகை யாமினி என்ற பெயரில் சினிமா நடிகையாகவே நடிக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மசாலா குடும்பம்'

உமாசங்கருக்கு அழகான மனைவி, அர்ஜூன், அஞ்சலி, அக்ஷயா என மூன்று குழந்தைகள். இதில் மாடி போர்சனுக்கு வரும் வினோத் உமாசங்கரின் மகளை காதலிக்கிறான். இந்த காதலில் ஜெயிக்க அவன் போடும் நாடகம்தான் கதையின் மையக்கரு.

பிரபல நடிகர்கள், நடிகையர்கள் நடிக்கும் இந்த காமெடி தொடருக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளது.

நடிகன் ஆசையில்

நடிகன் ஆசையில்

உமா சங்கர் தன் வாழ்நாளில் எப்படியாவது ஒரு பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசை கொண்டவர். இதற்காக அவ்வப்போது நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறுவது அவரது வழக்கம்.

இதனால் இவரது மாமியாரான வனசுந்தரி இவரை கொஞ்சம் கூட மதிப்பதில்லை.

சான்ஸ் கிடைத்தது

சான்ஸ் கிடைத்தது

உமா சங்கர் எதிர்பார்த்தது போலவே திடீரென ஒருநாள் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் நடிகை யாமினிக்கு கணவராக நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார் உமா சங்கர்.

யாமினியின் மனதில்

யாமினியின் மனதில்

உமா சங்கரின் நடிப்பு யாமினியை கவரவே, தனியாக சந்தித்து பேசுகிறாள் யாமினி. அதோடு நில்லாமல் உமா சங்கருக்கு ரூ.மூன்று லட்சம் சம்பளம் கொடுத்து தனக்கு ஆலோசகராக நியமிக்கிறாள் யாமினி.

மேனேஜருக்கு சிக்கல்

மேனேஜருக்கு சிக்கல்

இதன்பிறகு யாமினி அனைத்திற்கும் உமா சங்கரையே நாட, யாமினியிடம் பணிபுரியும் மேனேஜர் ஏபிசிக்கு பல விதங்களில் இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பல சந்தர்ப்பங்களில் ஏபிசியின் மூக்கை உடைக்கும் உமா சங்கரை எப்படியாவது இங்கிருந்து துரத்தி விட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கென திட்டமிடுகின்றான் ஏபிசி.அவன்முயற்சி பலித்ததா என்பது அடுத்து வரும் பரபரப்பு காட்சிகள்.

நடிகை புவனேஸ்வரி

நடிகை புவனேஸ்வரி

யாமினியின் வரவால் உமாசங்கரின் குடும்பத்தில் ஏற்படுத்தப் போகும் சலசலப்புகள் அடுத்தகட்ட விறுவிறுப்பு. நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை புவனேஸ்வரி நடிகை யாமினியாக இந்த தொடரில் நடிக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Masala Kudumbam serial telecast on Zee tamil tv Monday to Saturday 6.P.M. Uma Shankar, his wife, children Arjun, Anjali and Akshaya lives in a house owned by Vana Sundari mother of Uma Shanakar. Story will be treated in the lighter vein and will be the first of its kind cookery serial on Tamil Television.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more