Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாயா சிங்... அவருக்கு பதிலாக யாரு நடிக்கறாங்க பாருங்க!
சென்னை : நடிகை சாயா சிங் தனுஷுடன் இணைந்து திருடா திருடி படத்தில் கடந்த 2003 தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முன்னதாக கடந்த 2000ல் வெளியான முன்னுடி என்ற கன்னட படத்தில் நடித்த இவர் தொடர்ந்து 7 கன்னட படங்களில் நடித்த பின்பே தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் கும்பிட போன தெய்வம் பாடலுக்காக இவர் போட்ட ஆட்டம் மிகவும் பிரபலமானது.
Nenjuku
Needhi
Review:
ஆர்ட்டிக்கள்
15
படத்திற்கு
நீதி
செய்ததா
நெஞ்சுக்கு
நீதி?
விமர்சனம்
இதோ!

நடிகை சாயா சிங்
நடிகை சாயா சிங் கன்னடத்தில்தான் தன்னுடைய சினிமா கேரியரை துவக்கினார். கடந்த 2000ல் இவர் நடிப்பில் வெளியான முன்னுடி படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து கன்னடத்தில் 7 படங்களில் நடித்துள்ளார். அதன்பின்பே தமிழில் திருடா திருடி என்ற படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார்.

ரசிகர்களை கவர்ந்த நடனம்
இந்தப் படத்தில் அவரது நடிப்பு மற்றும் நடனம் இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக உள்ளது. தொடர்ந்து விஜய்யுடன் இவர் கும்பிட போன தெய்வம் பாடலுக்காக போட்ட ஆட்டமும் ரசிகர்களின் பேவரிட் லிஸ்ட்டில் எப்போதும் காணப்படுகிறது.

சின்னத்திரையில் பிசி
20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் சாயா சிங். தற்போது கேரக்டர் ரோல்களில் இவரை பார்க்க முடிகிறது. கடந்த 2011ல் இவர் நடிப்பில் நாகம்மா என்ற சீரியல் வெளியானது. இது இவரது முதல் சீரியல். தொடர்ந்து சின்னத்திரையிலும் பிசியாக பயணித்து வருகிறார் சாயா சிங்.

நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடர்
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நான்கு சகோதரிகளின் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரில் மூத்த சகோதரியாக இந்திராணி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

தொடரிலிருந்து விலகல்
ஆனால் தற்போது இந்த சீரியலில் இருந்து இவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் மே மாதம் 25ம் தேதிக்கு பிறகான எபிசோட்களில் இவருக்கு பதிலாக நடிகை ஸ்ருதி லட்சுமி இந்திராணியாக நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சின்னத்திரை நடிகையான ஸ்ருதி லட்சுமி முன்னதாக நீ வருவாயா என்ற சீரியலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஏமாற்றம்
மிகவும் அதிகமான ப்ரமோக்களுடன் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியல் துவங்கப்பட்டது. இந்தத் தொடரில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துவந்தார் சாயா சிங். இந்நிலையில் இவர் தொடரிலிருந்து விலகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இவரது விலகலுக்கான காரணம் குறித்து தயாரிப்பு தரப்பு எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

இந்திராணியாக ஸ்ருதி லட்சுமி
ஆனால் சாயா சிங் விலக உள்ளதும் ஸ்ருதி லட்சுமி இந்திராணி கேரக்டரில் நடிக்கவுள்ளதும் தயாரிப்பு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ருதி லட்சுமியும் இது குறித்து சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். மலையாள சீரியல் நடிகையான இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதை பெற்றவர்.