»   »  மலையாள சேனலில் கொஞ்சும் தமிழில் பேசி மார்க் போடும் தேவயானி

மலையாள சேனலில் கொஞ்சும் தமிழில் பேசி மார்க் போடும் தேவயானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை தேவயானி பிரபல மலையாள சேனலான மழவில் மனோரமா டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியின் நடுவராக பொறுப்பேற்று இருக்கிறார். கொஞ்சும் தமிழில் பேசி மார்க் போடுவது நிகழ்ச்சிக்கு கூடுதல் அழகு.

மலையாள சேனல்களையும் தமிழக ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து வருகின்றனர். ரியாலிட்டி நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளின் நடுவர்களாக தமிழ் நடிகர், நடிகைகள் உள்ளனர்.
‘உக்ரம் உஜ்வலம்' என்ற நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றுள்ளார் நடிகை தேவயானி. இந்த நிகழ்ச்சியின் பிரதான நடுவர்களாக நடிகர் வினீத், நடிகை கனிகா உள்ளனர்.

 கொஞ்சும் தமிழ் பேசும்

கொஞ்சும் தமிழ் பேசும்

மலையாள சேனலில் நடுவராக இருந்தாலும் கொஞ்சும் தமிழ் பேசினார் தேவயானி. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் திறமைகளை பாராட்டிய தேவயானி ஆங்கிலம் கலந்த தமிழில் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

திறமைக்கு பாராட்டு

திறமைக்கு பாராட்டு

நடனம் மட்டுமல்லாது கராத்தே, ஜிம்னாஸ்டிக், திரில்லிங் விளையாட்டு என பலவித திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான ‘உக்ரம் உஜ்வலம்' நிகழ்ச்சியின் நடுவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார் தேவயானி.

வினீத் ரசிகை

வினீத் ரசிகை

நிகழ்ச்சியின் பிரதான நடுவராக இருந்த வினீத்தின் நடனத்திற்கு தான் மிகப்பெரிய ரசிகை என்று கூறிய தேவயானி, மற்றொரு நடுவராக வந்திருந்த நடிகை கனிகாவை பாராட்டினார்.

சின்னத்திரையில் பிரபலம்

சின்னத்திரையில் பிரபலம்

நடிகை தேவயானி மலையாள ரசிகர்களுக்கு பரிட்சியமானவர். மலையாள சூப்பர்ஸ்டார்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துள்ள தேவயானி தற்போது மலையாள சேனலில் நடுவராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Devayani is participating in a dance show in a Malayalam channel and talking in Tamil in the show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos