“மண்டை மேல கொண்டை” குஷ்புவின் இந்த லேட்டஸ்ட் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

சென்னை: நடிகை குஷ்பு 80களில் இருந்ததை போலவே மீண்டும் ஸ்லிம்மாகி இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

"மண்டை மேல கொண்டை" என குஷ்பு போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக தனது இந்த லேட்டஸ்ட் மாற்றத்திற்கான காரணத்தையும் குஷ்பு தெரிவித்து இருக்கிறார்.

ஸ்லிம்மான குஷ்பு

ஸ்லிம்மான குஷ்பு

சினிமாவை விட்டு அரசியலில் ஆர்வம் காட்டி வந்த நடிகை குஷ்பு மீண்டும் சினிமா, சின்னத்திரை என பிசியாகி உள்ளார். இந்நிலையில், தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து சூப்பர் ஸ்லிம் ஆகி உள்ளார் நடிகை குஷ்பு. அவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ஆச்சர்யப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.

திருமண ஆசை

திருமண ஆசை

பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து கமெண்ட் அடித்து வந்தனர். அதை எல்லாம் ஓவர் டேக் செய்யும் விதமாக ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன் என்றே கமெண்ட் போட அதற்கும் செம கூலாக 25 வருஷம் லேட் ஆகிடுச்சு.. நான் வேணா என் கணவரிடம் கேட்டு சொல்கிறேன் என நச் பதில் கொடுத்து இருந்தார்.

மண்டை மேல கொண்டை

மண்டை மேல கொண்டை

இந்நிலையில், மீண்டும் நடிகை குஷ்பு குறும்புத்தனம் மாறாமல் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு "மண்டை மேல கொண்டை" என்று அதற்கு கேப்ஷனும் கொடுத்து மற்றவர்கள் ட்ரோல் செய்வதற்கு முன்பாக தன்னைத் தானே ட்ரோல் செய்தபடி போட்ட போட்டோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

டான்ஸ் ஷோ

டான்ஸ் ஷோ

மேலும், அடுத்த ட்வீட்டில் பல புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த நடிகை குஷ்பு, விரைவில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2வில் கலந்து கொள்ளப் போகிறேன் என ட்வீட் போட்டு இருக்கிறார்.

நடுவரா? போட்டியாளரா?

நடுவரா? போட்டியாளரா?

நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக உள்ள நிலையில், நடிகை குஷ்பு டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2விற்கு நடுவராக போகிறாரா? அல்லது போட்டியாளரா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

நடிகை குஷ்பு இப்படி சூப்பர் ஸ்லிம்மாக உடல் எடையை குறைக்க இந்த நடன நிகழ்ச்சி தான் காரணமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீக்கிரமே நடிகை குஷ்புவின் நடனத்தை கண்டு ரசிக்கவும் ரசிகர்கள் தயாராகி உள்ளனர்.

எல்லை மீறும் கமெண்ட்டுகள்

எல்லை மீறும் கமெண்ட்டுகள்

நடிகை குஷ்புவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு கீழே ஏகப்பட்ட எல்லை மீறும் கமெண்ட்டுகளும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. குஷ்புவின் ரசிகர்கள் நடிகை குஷ்புவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். சில பிரபலங்களும் குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரொம்ப அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர்.

அண்ணாத்த படத்தில்

அண்ணாத்த படத்தில்

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை குஷ்பு. இப்படி குஷ்பு மீண்டும் ஸ்லிம்மான நிலையில், ஏகப்பட்ட புதிய பட வாய்ப்புகளும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X