Don't Miss!
- News
தேனிலவில் ஷாக்.. குதிரையில் ஏறிய புதுமாப்பிள்ளை.. அடுத்து நொடி நடந்த "சம்பவம்".. அலறிய மணப்பெண்!
- Finance
இந்தியாவின் முதல் பட்ஜெட்..? நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சாதனை..! #Budget2023
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கலைஞர் டிவிக்கு தாவிய ராதிகா... விரைவில் முடிகிறதா சன் டிவியின் சித்தி 2 சீரியல்?
சென்னை : நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் சன் டிவியின் மிகவும் புகழ்பெற்ற தொடர். இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இப்போதும் காணப்படுகின்றனர்.
Recommended Video
இந்லையில் தற்போது சித்தி 2 தொடரை துவக்கி அதில் நடித்து வந்த ராதிகா, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது அவர் கலைஞர் டிவிக்காக பொன்னி C/o ராணி என்ற புதிய தொடரை எடுத்து வருகிறார். இந்தத் தொடர் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது.
சீரியல்
நடிகை
தற்கொலையில்
திடீர்
திருப்பம்…
காதலன்
கைது
!

சூப்பர்ஹிட் நாயகி
நடிகை ராதிகா, 80களில் மிகவும் சூப்பர்ஹிட் நாயகியாக இருந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நாயகியாக நடிப்பதில் இருந்து விலகிய அவர், சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பினார்.

சிறப்பான சீரியல்கள்
இவரது சித்தி, வாணி ராணி உள்ளிட்ட தொடர்கள் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவை. இந்த தொடர்களின் டிஆர்பி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. ரசிகர்கள் தினந்தோறும் இந்தத் தொடர்களை கொண்டாடினர். தற்போது போல யூடியூப் வசதிகள் அந்த காலகட்டத்தில் இல்லாததால் தினந்தோறும் டிவி முன்பு அந்த நேரத்தில் ஆஜராகி விடுவார்கள்.

சித்தி தொடர்
அந்த அளவிற்கு வரவேற்பை பெற்றன இந்தத் தொடர்கள். குறிப்பாக சித்தி என்ற தொடர் மிகவும் சிறப்பான வசூலை ராடான் டிவிக்கு பெற்றுத்தந்தது. குழந்தைப் பருவத்தில் ஒரு சிறுமிக்கு சித்தியாக மாறும் சூழலுக்கு தள்ளப்படும் ராதிகா, தொடர்ந்து தன்னுடைய அந்த சித்தி கேரக்டரை எப்படி நியாயப்படுத்துகிறார் என்பதாக கதையோட்டம் காணப்பட்டது.

சித்தி 2 தொடர்
இந்தத் தொடர் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், அடுத்தடுத்த தொடர்களை இயக்கிய ராதிகா, கடந்த ஆண்டில் சித்தி 2 தொடரை துவக்கி அதை சிறப்பான கதாபாத்திரங்களுடன் ஒளிபரப்பி வந்தார். கவின், வெண்பா, சாரதா என சிறப்பான பல கதாபாத்திரங்களுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்றது.

தொடரிலிருந்து விலகிய ராதிகா
ஆனால் இடையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தொடரிலிருந்து ராதிகா விலகினார். அது முதலே இந்த தொடர் தடுமாறியது. ஆனாலும் வெண்பாவாக நடித்த ப்ரீத்தி ஷர்மா மற்றும் கவினாக நடித்த நந்தன் லோகநாதன் உள்ளிட்டவர்களின் நடிப்பால் தொடர் நன்றாக சென்றது. குறிப்பாக கவின் -வெண்பா கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நிறைவடைகிறதா சித்தி 2?
கவின் சார் என்று வெண்பா கொஞ்சலாக கூப்பிடுவது அவ்வளவு அழகாக இருக்கும். இந்நிலையில் தற்போது ராதிகா, கலைஞர் டிவிக்காக பொன்னி c/o ராணி என்ற தொடரை தயாரித்து வருகிறார். இந்தத் தொடர் அடுத்த மாதத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் சித்தி 2 விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்தத் தொடரை மேலும் நீட்டிக்க வேண்டும் சித்தியாக நடித்த ராதிகா மீண்டும் நடிக்க வேண்டும் என்று அவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கவின் மற்றும் வெண்பாவின் அழகான காதலை மிஸ் செய்ய விரும்பவில்லை என்றும் கூறிவருகின்றனர்.