»   »  ஜெமினி டிவியில் குடும்ப பிரச்சினையை தீர்க்கக் போகும் எம்.எல்.ஏ ரோஜா

ஜெமினி டிவியில் குடும்ப பிரச்சினையை தீர்க்கக் போகும் எம்.எல்.ஏ ரோஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் இருந்து சின்னத்திரைக்குப் போய் அரசியல்வாதியாக வெற்றி பெற்றாலும் இன்னமும் சின்னத்திரையில் விடாமல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார் ரோஜா எம்.எல்.ஏ. சட்டசபையில் அதிரடியாக பேசி அரசியல் செய்வது போலவே நிகழ்ச்சிகளிலும் அதிரடியாக கலக்கி வருகிறார்.

ஜீ தமிழ் டிவியில் லக்கா கிக்கா நடத்தி அதிரடி ஆட்டம் போட்ட ரோஜா இப்போது ஜீன்ஸ் நிகழ்ச்சி மூலம் கலக்கி வருகிறார். இப்போது தெலுங்கு சேனல்களிலும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

இது ரியாலிட்டி நிகழ்ச்சி இல்லையாம். குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் சமூக சேவை நிகழ்ச்சியாம். ஜெமினி டிவியில் ரோஜா வரும் ஸ்டைலைப் பார்த்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம்.

ரோஜா காலம்

ரோஜா காலம்

செம்பருத்தியில் அறிமுகமான நடிகை ரோஜா 90களில் தமிழ் சினிமா உலகின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடித்த அவர், தற்போது அழகான அம்மா நடிகையாகவும் நடித்து வருகிறது.

நடிப்பு + அரசியல்

நடிப்பு + அரசியல்

செல்வமணியை திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகளாக இருந்தாலும் ஆந்திர அரசியலுக்கு சென்று அங்கேயும் வெற்றி பெற்று விட்டார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

தெலுங்கு சேனல்

தெலுங்கு சேனல்

ஜீ தமிழ் டிவியில் தற்போது ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் அழகான ஆடைகள் அணிந்து வந்து நிகழ்ச்சியை அழகாக நடத்தி செல்கிறார். ரோஜாவின் தாய் மொழி தெலுங்கு என்பதால் தற்போது தெலுங்கு டிவியிலும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

குடும்ப பிரச்சினைகள்

குடும்ப பிரச்சினைகள்

புது முயற்சியாக இவர் தெலுங்கு ஜெமினி டிவியில் ரக்சா பந்தா என்ற நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி குடும்ப பிரச்சனைகளில் எது தவறு எது சரி என்று ஆராயும் நிகழ்ச்சியாம்.

தீரும் சிக்கல்கள்

தீரும் சிக்கல்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போன்றது. இந்நிகழ்ச்சி தற்போது ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கில் சரளமாக பேசி சிக்கலை தீர்த்து வைக்கிறாராம். இதற்கான முன்னோட்டத்தைப் பார்த்தே ஏராளமானோர் ரோஜாவை பாராட்டி வருகின்றனராம்.

English summary
Actress Roju has come up with a new show 'Racha Banda', which deals with the real people and their issues. The show is going to telecast on Gemini TV

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil