அங்கே போயா செல்ஃபி எடுப்பாங்க… ஷிவானியின் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ஒரு செல்ஃபி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ஏராளமான ரசிகர்கள் ஏடாகூடமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஷிவானி நாராயணன்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும் கார்த்திக் சாயிஷா நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கின் முறைபெண்ணாக நடித்திருந்தார்.

பிக்பாஸ்
இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் நடிகை ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இணையத்தில் ஆக்டிவ்
தற்போது இவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அவருக்கு ஜோடியாவா
ஷிவானி சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அது மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நடிக்க இருப்பதாகவும், அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அங்கே போயா செல்ஃபி எடுப்பீங்க
இந்நிலையில், ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாத்ரூம் கண்ணாடி முன் நின்று செஃல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவரின் வயிற்றுப்பகுதி மட்டுமே தூக்கலாக தெரிகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வந்தாலும், ஒரு சிலர் எங்கே நின்று செல்ஃபி எடுப்பது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா என்று கேட்டு வருகின்றனர்.
Recommended Video

காதலிப்பதாக கிசுகிசு
பிக் பாஸ் 4ம் சீசன் நிகழ்ச்சியின் போது பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஷிவானியின் அம்மாவும், பாலாஜி பின்னாடி ஏன் இப்படி சுத்திட்டு இருக்க, உனக்கு வேற வேலை இல்லையா என்று ஷிவானியை கடுமையாக திட்டித் தீர்த்தார். மேலும், ஷிவானியும், பாலாஜியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வேகமாக பரவின.

பாலாஜி அண்ணனா
சமீபத்தில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஹாப்பி ரக்ஷா பந்தன் என பாலா ஷிவானிக்கு அனுப்ப, அதற்கு ஷிவானி தேங்க்ஸ் டா பாலா என தெரிவித்திருந்தார்.இதைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் என்னது பாலாஜி அண்ணாவா என்று கடுமையாக ட்ரோல் செய்தனர். மேலும் என்னடா திடீர்னு அண்ணன் தங்கை போல மாறிட்டீங்க என பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications