Don't Miss!
- News
"எம்.பி" இளையராஜா தகுதியானவர்தான்.. ஆனால் இப்போ குடுத்தது கொஞ்சம் சறுக்கலாக இருக்கு.. கே எஸ் அழகிரி
- Finance
ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அட்ஜெஸ்ட்மெண்ட்… அம்மா வந்தா ஓகேவாம்... ஸ்ரீநிதி சொன்ன ஷாக் நியூஸ் !
சென்னை : விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சினிமாவில் தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
கேரளாவை பூர்வீகமாககொண்ட ஸ்ரீநிதி, திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பை முடித்தார்.
நடிப்பின் மீது தீராத காதல் கொண்ட ஸ்ரீநிதி, மலர்வாடி என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தளபதி
66
இரண்டாவது
ஹீரோயின்
இவர்
தான்...ராஷ்மிகாவிற்கு
போட்டியாக
களமிறங்க
போகும்
ப்யூட்டி

நடிகை ஸ்ரீநிதி
நடிகை ஸ்ரீநிதி, சயபென்சில் என்ற மலையாள படத்திலும், நாங்களும் நல்லவங்க தான் என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார். இந்த படங்கள் சில பிரச்சனைகள் காரணமாக இதுவரை வெளியாகவில்லை. இதையடுத்து கிடைத்த சிறு சிறு ரோலில் நடித்து வந்தார் ஸ்ரீநிதி.

செந்தூரப்பூவே
நீண்ட போராட்டத்திற்கு பின், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'தறி' என்ற தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த தொடர் ஓரளவிற்கு பேசும்படியாக இருந்தது. இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித்துக்கு ஜோடியாக இருந்தார். சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

சினிமா இன்னும் திருந்தல
இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் ஒரு சிலர் இன்னும் திருந்தவில்லை என்றும், தானும் அட்ஜெஸ்ட்மெண்ட் அச்சுறுத்தலை சந்தித்ததாகவும் கூறினார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, மலையாள படம் ஒன்றின் ஆடிஷனுக்கு என்னை அழைத்தார்கள். அது பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் படம் என்பதால் இதில் வாய்ப்பு கிடைத்தால், நன்றாக இருக்கும் என்று பல கனவுகளுடன், நானும் என் அம்மாவும் ஆடிஷனுக்கு சென்றிருந்தோம். அப்போது, அங்கிருந்தவர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினர். அப்போது, எங்கள் இருவருக்கும் அதுபற்றி புரியவில்லை.

அம்மா வந்தா ஓகே
அப்புறம், எல்லாத்துக்கும் அட்ஜெஸ்ட் பண்ணவேண்டும் என்று சொன்னார்கள். அப்போது, அம்மா அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அம்மா, நாங்க நல்ல குடும்பத்துல இருந்து வர்றோம் என்றார். உடனே, அவங்க பொண்ணு இல்லன்னா கூட பரவாயில்லை. அம்மா வந்தா கூட ஓகே தான் என்று சொன்னார்கள். இதனால், என் அம்மா மிகவும் மனவேதனை அடைந்தார் என்று ஸ்ரீநிதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.