»   »  மயூரி தொடங்கி நாகினி வரை சுதா சந்திரனின் பயணம்

மயூரி தொடங்கி நாகினி வரை சுதா சந்திரனின் பயணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மயூரி படத்தில் நடனமாடி ரசிகர்களை அசத்திய சுதா சந்திரன், சன்டிவியில் இரவு பத்து மணிக்கு நாகினி சீரியலில் பாசமான அம்மாவாக வந்து இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அழகான ஆடைகள், அதீத மேக் அப், விலை உயர்ந்த நகைகள் என பணக்கார தோற்றம் கொண்ட வட இந்திய பெண்மணியை ரசிகர்களின் கண்முன் நிறுத்துகிறார் சுதா சந்திரன்.

விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு, ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நடத்தி வந்த சுதா சந்திரன் திடீரென, அவற்றில் இருந்து விலகி நாகினி சீரியலில் நடித்தார். இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

மயூரி படத்தில் அறிமுகமாகி வசந்த ராகம்', 'சின்னதம்பி பெரியதம்பி' என்று எண்பதுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுதாசந்திரன். இவருக்கென்று அப்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது.

தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என்று இந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி நாயகியாக வலம் வந்தவர், பின்னர் சினிமாவைவிட டிவியில் நடிப்பதை அதிகம் விரும்பி தொலைக்காட்சியில் நடித்து வருகிறார்.

எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி. ஆனால் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பைதான். ஒவ்வொரு வருடமும், திருச்சி வயலூர் முருகன் கோயிலுக்கு ஆகஸ்ட், செப்டம்பர்ல மறக்காம குடும்பத்தோடு ஆஜர் ஆகிடுவோம். எனக்கு ஆரம்பத்துல சென்னை செட் ஆகாமத்தான் இருந்தது. இப்போ ஐ லவ் சென்னை என்கிறார் சுதா சந்திரன். தன்னுடைய சீரியல் பயணம் பற்றி பிரபல இதழுக்கு அவர் அளித்த பேட்டி.

இந்தி சீரியல்கள்

இந்தி சீரியல்கள்

என்னுடைய முதல் சீரியலே ஹிந்தி மொழியில்தான். அதற்குப் பிறகு பல இந்தி சீரியல்களில் நடித்தேன். தமிழ் சீரியலை பொறுத்தவரை நான் முதலில் நடித்து, நல்ல பெயர் வாங்கி கொடுத்தது விஜய் டி.வியின் 'தெய்வம் தந்த வீடு'.

தெய்வம் தந்த வீடு

தெய்வம் தந்த வீடு

தெய்வம் தந்த வீடு' சீரியலில் தெரிந்தோ, தெரியாமலோ எப்படி அந்த கதா பாத்திரத்தைக் கொடுத்தார்களோ எனக்குத் தெரியாது. ஆனால்,உண்மையில் என்னுடைய 'ரியல் லைஃப்' கேரக்டரும் இதுதான். எந்தப் பிரச்னைகளையும் கண்டு பயப்பட மாட்டேன். தெய்வம் தந்த வீடு' ஒரு சில மனஸ்தாபத்தால விலக வேண்டியதாயிற்று.

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

ஜி தமிழ் 'சொல்வதெல்லாம் உண்மை' ஒரு வருட அக்ரிமெண்ட். ஒரு வருடத்தை முடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டேன். இந்த இரண்டின் மூலமும் தமிழ் மக்கள் மனதில் நல்ல இடம் எனக்குக் கிடைச்சது. குறிப்பாக, 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் நிறைய கத்துக்கிட்டேன்.

மனித நேயம்

மனித நேயம்

எனக்கு ஹிந்திதான் ஸ்போக்கன் லாங்குவேஜ். என்னதான் தமிழ் தெரிந்தாலும் அந்த நிகழ்ச்சியில மக்கள் பேசுற தமிழ் வார்த்தைகள் சில புரியாமலே இருந்தது. ஆனா, அவர்களுடைய உணர்வுகள், ஏமாற்றங்கள், வலிகள் எல்லாவற்றையும் புரிஞ்சுக்க முடிந்தது. மொத்தத்தில் அந்த நிகழ்ச்சியின் வாயிலாக மனிதநேயத்துடன் இன்னும் பலரிடம் நடந்துகொள்ள முடிந்தது.

நாகினிக்கு விருது

நாகினிக்கு விருது

இந்தியில் நாகின் எனும் பெயரில் வெளிவந்த சீரியலில் நடித்ததற்காக 'சிறந்த சீரியல் நடிகை' விருது கிடைத்தது. அந்த சீரியல்தான் 'நாகினி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை வந்த சீரியல்களிலேயே மிகவும் வித்தியாசமான சீரியல் என்றால் அது இந்த சீரியல்தான்.

ரசிகர்களின் பாராட்டு

ரசிகர்களின் பாராட்டு

வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்புமுனைகள் என மக்களின் ஆர்வத்தை இந்த சீரியல் நிச்சயமாக தூண்ட வைக்கும் என்பதை 100% உறுதியாக சொல்வேன். தமிழ்நாட்டுல இருந்து வித்தியாசமான ரோல்களை மக்கள் எதிர்பார்க்கிறாங்க. நாகினி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள் என்று மகிழ்ச்கிறார் சுதா சந்திரன்.

பெரிய ஆசை இல்லை

பெரிய ஆசை இல்லை

எனக்கு சொத்து, பொருள் மேல எல்லாம் அந்த அளவுக்கு ஆசை கிடையாது. எனக்குத் தெரிந்து இதுவரை நான் பண்ணாத ரோலே கிடையாது.தொடர்ந்து என் கடைசி நாள் வரை என் கால் நிற்காம ஆடிட்டே இருக்கணும். இதுதான் எப்போதும் என்னோட ஆசையா இருக்கும் என்று கூறியுள்ளார் சுதா சந்திரன்.

English summary
Sun TV, Naagini seems to have had a good opening on its premiere day. According to a TV audience data, the Tamil version of Naagin.Versatile actress and talented dancer Sudha Chandran hit supernatural show Naagin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil