Bigg Boss 9: பிக்பாஸ் வீட்டிற்குள் அகோரி.. அவங்க இருந்தால் ஜாலியாக இருக்குமேனு ரசிகர்கள் பேச்சு!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்று முதல் அதாவது அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற லிஸ்ட் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வெளியாகி விவாதத்தை உருவாக்கி உள்ளது. ,ஸ்டேன்டப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், குக் வித் கோமாளி கனி திரு, வாட்டர் மெலன் திவாகர், விஜே பார்வதி, வி.ஜே.ஷோபனா, பிரவீன்ராஜ் தேவசகாயம், நடிகை மாலினி ஜீவரத்தினம், நடிகர் சபரிநாதன், வியனா, இயக்குநர் பிரவீன் காந்தி, கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி அப்சரா சி.ஜே, வினோத் பாபு, ஜனனி அசோக்குமார், வைஷாலி கேம்கர், ரோஷன், ரம்யா ஜூ, மஞ்சுநாதன் உள்ளிட்டோர் தான் இந்த சீசனின் போட்டியாளர்கள் என்று ஒரு தகவல் உலா வருகிறது.

அதேபோல் தற்போது ஒரு வீடியோவும் இணையத்தில் வேகமாக உலா வருகிறது. அதில், இணையத்தில் பிரபலமான அகோரி கலையரசனும் கலந்து கொள்ளப் போவதாக வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அகோரி கலையரசன் தானும் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பிரிந்து இருந்த அவரது மனைவியும் அவருடன் இருப்பதால், தனக்கு ஆதரவாக அவரது மனைவிதான் இனிமேல் வீடியோக்களைப் பதிவிடுவார் என்றும் கூறுகிறார்.

Aghori Kalaiyarasan Enters Into Bigg Boss Tamil Season 9 as Contestant Video Goes Trending

இதைப் பார்த்த பலரும் பிக்பாஸில் களமிறக்க உண்மையாலுமே ஆட்கள் கிடைக்க வில்லையா? அல்லது ரசிகர்கள் மீது பிக் பாஸ்க்கு ஏதாவது கோபமா என்று எல்லாம் கேட்டு வருகிறார்கள். அதேபோல் அகோரி கலையரசன் உள்ளே இருக்கிறார் என்றால், நாத்திகவாதி யாராவது வீட்டிற்குள் இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் பலரும் பேசி வருகிறார்கள்.

திவாகர் - பலூன் அக்கா: மேலும் பலர், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கடந்த சில காலமாகவே சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். ஜி.பி முத்து, சூரி உள்ளிட்டோரை எல்லாம் தரக்குறைவாக பேசினார். கவின் ஆணவப் படுகொலையில் கொலையாளிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினார். அவருக்கு ஊடகத்தினர் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று பேச்சுக்கள் உலா வந்த நிலையில் அவரை போட்டியாளராக்கியிருப்பது மீண்டும் அவர் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் பேசி வருகிறார்கள். அதேபோல் பலூன் அக்கா அரோரா என்பவரும் ஆபாசமான முறையில் பேசி, ஆபாசமான முறையில் சைகைகள் செய்து அவற்றை வீடியோவாக அப்லோட் செய்து சர்ச்சையில் சிக்கியவர். இவரையும் போட்டியாளராக களமிறக்கி உள்ளதால், இவர் வீட்டிற்குள் எப்படியெல்லாம் கூத்து அடிக்கப்போகிறாரோ என்று பேசி வருகிறார்கள்.

ரசிகர்கள் புலம்பல்: இவர்களைப் போன்றவர்கள் தான் போட்டியாளர்கள் என்ற தகவல் பரவியதும், இவர்களை தவிர்த்து விஜய் டிவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா என்று விளாசிவருகிறார்கள். மேலும் இவர்கள் எல்லாம் சேர்ந்து என்னென்ன கூத்து அடிக்கப் போகிறார்களோ என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சில இவர்கள் கேமராவுக்கு முன்னால் எப்படி இருந்தார்கள் என்பது தான் நமக்குத் தெரியும், அப்படி இருக்கும்போது, இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இயல்பாக எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துவிடும், எனவே அதை பார்த்துவிட்டு விமர்சனம் செய்ய வேண்டும், தனிப்பட்ட தாக்குதல் கூடாது என்று பேசுபவர்களும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X