For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மெர்சல் தான் போங்க.. ’மிஸ் சூப்பர் குளோப்’ பட்டம் வென்ற அழகியும் பிக் பாஸ் வீட்டுக்கு வராங்களாம்!

  |

  சென்னை: அடுத்த வாரம் இந்நேரம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அட்டகாசமான ஆரம்ப விழாவை அனைவரும் கண்டு ரசித்துக் கொண்டு இருப்பீர்கள்.

  ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட உத்தேச போட்டியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பிக் பாஸ் ரசிகர்களுக்காக மேலும், ஒரு உத்தேச போட்டியாளர் பெயரை வெளியிடுகிறோம்.

  2019ம் ஆண்டுக்கான மிஸ் சூப்பர் குளோப் பட்டம் பெற்ற அக்‌ஷரா ரெட்டியும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  ரம்யா பாண்டியன் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிக் பாஸ் பிரபலம்.. என்ன சொன்னாரு தெரியுமா?ரம்யா பாண்டியன் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிக் பாஸ் பிரபலம்.. என்ன சொன்னாரு தெரியுமா?

  புரமோக்களில் கலக்கும் கமல்

  புரமோக்களில் கலக்கும் கமல்

  முதல் சீசனில் எப்படி கலக்கினாரோ உலக நாயகன் கமல்ஹாசன் அதே போலத்தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புரமோக்களிலும் வேற லெவல் எனர்ஜியுடன் கலக்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரே ஒரு வாரம் தான் உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

  100 நாட்களுக்கு என்டர்டெயின்மென்ட்

  100 நாட்களுக்கு என்டர்டெயின்மென்ட்

  வரும் அக்டோபர் 3ம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த 100 நாட்களுக்கும் மேல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மென்ட் கொடுக்க காத்திருக்கிறது. சண்டை, சர்ச்சை, கொண்டாட்டம், காதல், மோதல் என பல உணர்வுகளையும் ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர்.

  தெரியாத முகங்கள்

  தெரியாத முகங்கள்

  கடந்த சீசனை போல ஏகப்பட்ட தெரிந்த முகங்களாக இல்லாமல், இந்த முறை அதிகளவில் தெரியாத புதிய முகங்களை போட்டியாளர்களாக களமிறக்க பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளது. கடந்த சீசனை ரசிகர்கள் கழுவி ஊற்றிய நிலையில், இந்த அளவுக்கு கூட மாற்றத்தை கொண்டு வரவில்லை என்றால் மற்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு முன்பாக மண்டியிடும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் வேற லெவலில் இந்த சீசனை கொண்டு செல்ல விஜய் டிவி திட்டமிட்டு இருக்கிறது.

  எதிர்பார்க்கும் போட்டியாளர்கள்

  எதிர்பார்க்கும் போட்டியாளர்கள்

  மிலா, நமிதா மாரிமுத்து, யாஷிகா ஆனந்த் நண்பன் நிரூபன், பிரியங்கா, ஜாக்குலின், இமான் அண்னாச்சி, பிரியா ராமன், ஷாலு ஷம்மு, சந்தோஷ் பிரதாப், பவானி ரெட்டி, ரேணுகா பிரவீன், நதியா சங் உள்ளிட்ட பலர் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போவதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

  ஐடிசி கிராண்ட் ஹோட்டலில்

  ஐடிசி கிராண்ட் ஹோட்டலில்

  சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சொகுசு ஹோட்டலில் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. ஷாலு ஷம்மு, நமிதா மாரிமுத்து, மிலா உள்ளிட்டோர் அந்த புகைப்படங்களில் உள்ளனர்.

  மிஸ் சூப்பர் குளோப் பட்டம்

  மிஸ் சூப்பர் குளோப் பட்டம்

  இந்நிலையில், இன்னொரு சூப்பரான போட்டியாளரும் பிக் பாஸ் சீசன் தமிழ் 5ல் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் யாரென்றால் 2019ம் ஆண்டு மிஸ் சூப்பர் குளோப் பட்டம் வென்ற அக்‌ஷரா ரெட்டி தான்.

  மலேசிய படம்

  மலேசிய படம்

  சென்னையில் பிறந்து வளர்ந்த அக்‌ஷரா ரெட்டி 2019ம் ஆண்டு இந்தியளவிலான மிஸ் சூப்பர் குளோப் மற்றும் உலகளவிலான மிஸ் சூப்பர் குளோப் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். காசு மேல காசு எனும் மலேசிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், ஹேப்பி நியூ இயர் எனும் தமிழ் குறும்படத்திலும் நடித்துள்ளார்.

  வில்லா டு வில்லேஜ்

  வில்லா டு வில்லேஜ்

  விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட அக்‌ஷரா ரெட்டி அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்றார். அதன் பிறகு தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் அனைத்துமே உறுதியாகி விடும்.

  English summary
  Miss Super Globe title winner Akshara Reddy also will ready enter in to Bigg Boss Tamil Season 5 buzz circulates in close circles of Vijay Tv.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X