»   »  ஆரவ் போதும்ப்பா விடுப்பா... பிந்துவை கட்டிப்பிடித்துக் கலங்கடித்த ஹவுஸ்மேட்ஸ்!

ஆரவ் போதும்ப்பா விடுப்பா... பிந்துவை கட்டிப்பிடித்துக் கலங்கடித்த ஹவுஸ்மேட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 96-வது நாள் நிகழ்வு நேற்று ஒளிபரப்பானது.

திடீரென, வார நாளான நேற்றே ஹவுஸ்மேட்களில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

சினேகன், கணேஷ் வெங்கட்ராம் தவிர, பிந்து மாதவி, ஹரீஷ், ஆரவ் ஆகிய மூவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிக்பாஸ் :

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிக்பாஸ் :

பிக்பாஸ், இன்று நள்ளிரவே வெளியேற வேண்டும் என போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். எவிக்ட் செய்யப்படவேண்டிய மூவரையும் மேடைகளின் மீது நிற்கவைத்து விளக்குகள் ஒளிரத் தொடங்கின. முதலில் ஆரவ் மீது பச்சை விளக்கு எரிந்து அவர் சேஃப் என உணர்த்தியது.

பிந்து மாதவி வெளியேற்றம் :

பிந்து மாதவி வெளியேற்றம் :

பின்பு, ஹரீஷ், பிந்து ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்கிற நிலை இருந்தது. இந்த இருவர் உட்பட அனைவருமே மிகுந்த பதற்றத்தில் காத்திருக்க பிந்து மாதவி எவிக்ட் ஆனதாக அறிவிக்கப்பட்டார். நள்ளிரவு ஒரு மணிக்கே பேக் செய்து கிளம்புமாறு கூறினார் பிக்பாஸ்.

கட்டிப்பிடி வைத்தியம் :

கட்டிப்பிடி வைத்தியம் :

எவிக்ட் செய்யப்பட்ட பிந்து கண்கலங்கியபடி எல்லோரையும் கட்டிப் பிடித்துக்கொண்டார். அவருக்கான பெட்டி வந்தது. சிநேகன் கேவிக் கேவி அழத் தொடங்கினார். பிந்து வந்து அவரைக் கட்டியணைத்துச் சமாதானம் செய்தார். சினேகனை கட்டிப்பிடி வைத்தியர் எனக் கூறிவன்ந்த நிலையில் நேற்று அனைவருமே அந்த நிலைக்கு மாறியிருந்தனர்.

ஆரவ்வுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா :

ஆரவ்வுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா :

பிந்து நான்கு பேரையும் திரும்பத் திரும்பக் கட்டிப்பிடித்துச் சமாதானப்படுத்திவிட்டு பிக்பஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே நேற்று வெகுநேரம் பிடித்தது. அதிலும் ஆரவ்வை ரொம்ப நேரமாக விடாமல் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் பிந்து மாதவி.

English summary
Bindhu Madhavi was evicted when biggboss nearly reached the finish line. Bindhu hugged all housemates and comforted everyone before leaving.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil