புது படங்களை போட்டு அசத்திய டிவி சேனல்கள்.. டி.ஆர்.பி யாருக்கு?

சென்னை : தமிழ் புத்தாண்டையொட்டி புது படங்களை ஒளிபரப்பி மக்களை மகிழ்வித்த தொலைக்காட்சிகள்.

Recommended Video

BlockBuster Shows are BACK | Saravanan Meenatchi | Mahabharatham | Raja Rani

கொரோனா பாதிப்பு வந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்ட நிலையில் அனைத்து துறைகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் பொழுதுபோக்கு துறையான சினிமா துறை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சீரியல் ஷூட்டிங் ஏதும் நடக்காததால் சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பழைய ஹிட் சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

 All Tv Channels telecast many new films in Tamil New Year.

ஒரு சில தொலைக்காட்சிகள் படமாக போட்டு தள்ளுகின்றனர். ஆனால், எவ்வளவு நேரம் தான் டிவி பார்ப்பது, பார்த்த படத்தையே எத்தனை முறை பார்ப்பது என்று மக்களுக்கு பெறுத்துப்போய் இருந்தனர். இந்நிலையில், நேற்று தமிழ் புத்தாண்டன்று அனைத்து சேனல்களும் தங்கள் கைவசம் இருந்த புதுப்படங்களை போட்டு அசத்தி உள்ளனர்.

 All Tv Channels telecast many new films in Tamil New Year.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் அஜித், ரஜினி, சூர்யா, விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் ஹிட் படத்தை போட்டு பொதுமக்களை கவர்ந்தனர்.

விஜய் டிவியில் வெளிவந்து சில மாதங்களே ஆன மெகாஹிட் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஒளிபரப்பானதால், இந்த படம் அனைத்து சேனல்களுக்கும் மதியநேரத்தில் ஹெவி காம்படிஷன் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 All Tv Channels telecast many new films in Tamil New Year.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை ஒளிபரப்பான நேர் கொண்ட பார்வை தல ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதே நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தர்பார் திரைப்படம் ரஜினி ரசிகர்களை பெரும் அளவு ஈர்த்தது. ஒரு பக்கம் அல்டிமேட் ஸ்டார் இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் என்று அனைத்து சேனல்களும் சும்மா தெறிக்க விட்டன.

கே டிவியில் தானா சேர்ந்த கூட்டம், ஜெயா டிவியில் சிவகாசி போன்ற பல படங்கள் ஒளிபரப்பாகின. இந்த படங்களை ரசிகர்கள் பல முறை வெள்ளித்திரையில் பார்த்திருந்தாலும் இந்த ஊரடங்கு நேரத்தில் இந்த மாதிரியான ஹிட் படங்களை ஒளிபரப்பும் போது அதற்கு தனி மவுசு தான்.

 All Tv Channels telecast many new films in Tamil New Year.

மக்களுக்கு ஒரு பெரிய கவலை என்ன வென்றால், அனைத்து சேனல்களிலும் ஒரே நேரத்தில் ஹிட் படங்களை போட்டுவிட்டதால், ரசிகர்கள் எதை பார்ப்பது என்று குழம்பினர். ஆனால் அனைத்து தொலைக்காட்சி நிறுவனமும் டி.ஆர். பியை அள்ளியது என்பது நிதர்சனமான உண்மை.

அப்பாடா ஒரு வழியா ஊரடங்கு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. எல்லாருக்கும் பழைய சீரியல்களில் இருந்தும், போட்டு போட்டு போர் அடித்த படங்களில் இருந்து விடுதலை என்று நினைத்து பெரும் மூச்சு விட்டு முடிக்கும் நேரத்தில், ஊரடங்கு நீட்டிப்பு செய்தி, மனதை மீண்டும் வெறுப்பாக்கி உள்ளது. சிலருக்கு இந்த காலகட்டம் மிக சந்தோஷம் சிலருக்கு வருத்தம் .

 All Tv Channels telecast many new films in Tamil New Year.

அனைத்து படங்களும் அவரவர் ரசிகர்களால் பெரும் அளவுக்கு பார்த்து ரசிக்கப்பட்டதினால். எந்த சேனல்ளுக்கு அதிக டி. ஆர். பி வரப்போகுதோ என்று அந்தந்த டிவி நிறுவத்தினர் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X