Don't Miss!
- News
இது சும்மா ட்ரெய்லர் தான்! நாளைக்கு பாருங்க எங்க கூட்டத்தை! பஞ்சாப் அரசை கதிகலங்க வைத்த விவசாயிகள்.!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்பா.. ராம் என்னம்மா வழியுறாரு.. வெண்ணெய் சிலை மாதிரி இருக்கும் வனேசா சர்வைவருக்கு செட் ஆவாரா?
சென்னை: பிக் பாஸில் மட்டுமல்ல சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் மலேசிய தமிழ் போட்டியாளர் களமிறங்கி உள்ளார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக 3வது வாரத்தில் நேற்று களமிறங்கிய இனிகோ பிரபாகர் மற்றும் வனேசா க்ரூஸ் பற்றித் தான் ரசிகர்கள் அதிகம் தேடி வருகின்றனர்.
மிரட்டலான பிசாசு 2 படத்தில் அழகான மெலடி பாடல் வெளியானது
பார்க்கவே வெண்ணெய் சிலை மாதிரி இருக்கும் வனேசா இந்த சர்வைவர் நிகழ்ச்சிக்கு செட்டாவாரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இனிகோ பிரபாகர்
தல அஜித்தின் ஜி படம் மூலம் நடிகராக அறிமுகமான இனிகோ பிரபாகர், சுந்தரபாண்டியன், ரம்மி, அழகர் சாமியின் குதிரை, பிச்சுவா கத்தி, வீரையன் மற்றும் ஆர்.கே. நகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த அவர் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துப் போட்டு வேடர்களை சந்தோஷப்படுத்தி விட்டார்.

யார் இந்த வனேசா
மற்றொரு போட்டியாளரான வனேசா மீது தான் இளைஞர்களின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த வனேசா என்று பார்த்தால், மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் தான் வனேசா என்பது தெரிய வந்தது. மேலும், 2017ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் ஏசியா மலேசியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அழகிப் பட்டம் வென்றவர் தான் இந்த வனேசா

அழகும் அறிவும்
மிஸ் யூனிவர்சிட்டி மலேசியா 2018 டைட்டில், மிஸ் ஃபிட்னஸ் ஏசியா இன்டர்நேஷனல் என ஏகப்பட்ட அழகிப் போட்டி பட்டங்களை வென்ற இவர் சிறந்த செஸ் பிளேயரும் கூட, அழகும் அறிவும் சேர்ந்த வனேசா சர்வைவர் நிகழ்ச்சியில் தாக்குப்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமாவிலும்
அதையும் தாண்டி #புனிதமானது, நேத்ரா எனும் தமிழ் படங்களில் நடித்துள்ள வனேசா சில சீரியல்களிலும் நடித்துள்ளார். வனேசாவின் வருகை விஜயலட்சுமி மற்றும் லக்ஷ்மி பிரியா உள்ளிட்ட பெண் போட்டியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது நேற்றைய எபிசோடிலேயே காண்பித்து இருந்தனர்.

வெண்ணெய் சிலை
இதுவரை சர்வைவர் தமிழ் சீசனில் இருந்த போட்டியாளர்களில் சிருஷ்டி டாங்கே இளைஞர்களை கவர்ந்த நிலையில், முதல் வாரத்திலேயே அவர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், வெண்ணெய் சிலை போல வந்துள்ள வனேசா சர்வைவருக்கு செட்டாவாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

வழியும் ராம்
எப்போடா சர்வைவர் ஷோவில் இருந்து ராமை எலிமினேட் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் போது நேற்று புதிதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனேசாவுக்கு அந்த தீவை சுற்றிக் காட்டுகிறேன் என ராம் வழிந்ததை பார்த்து ரசிகர்கள் மேலும் காண்டாகி உள்ளனர்.