இனி திரும்பி வர மாட்டேன்... ஆலியா மானசாவின் போஸ்டால் மனம் நொருங்கிய ரசிகர்கள்
சென்னை : நடிகை ஆலியா மானசா இனி திரும்பி வர மாட்டேன் என சொல்லி இருப்பதை கேட்டு அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். எதற்காக இப்படி ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
சின்னத்திரையில் ஒரே சீரியலில் பிரபலமாகி, நம்ம வீட்டு பொண்ணு என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய நடிகைகள் மிக சிலரே. அப்படி ஒரே சீரியலில் ஏகப்பட்ட ஃபேன்சை தனக்கென சம்பாதித்தவர் ஆலியா மானசா. விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஆலியா.

ரசிகர்களை கவர்ந்த ஆலியா மானசா
இதில் இவர் நடித்த செம்பா கேரக்டர் பலரின் ஃபேவரைட். இந்த சீரியலில் ஆலியா மற்றும் ஹீரோ கார்த்திக் ரோலில் நடத்த சஞ்சீவ் ஆகியோரின் காம்போவை யாராலும் மறக்க முடியாது. இவர்களின் காதல் சீன்கள், ஆலியா கொஞ்சும் தமிழில் "சின்னய்யா...சின்னய்யா" என கூப்பிடுவதை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அதுக்குள்ள சீரியலை முடித்து விட்டார்களே என அந்த சமயத்தில் பலரும் வருத்தப்பட்டனர்.

ரியலில் சேர்ந்த ரீல் ஜோடி
ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது ஆலியா-சஞ்சீவ் இருவரும் நிஜமாகவே காதலிக்க துவங்கினர். இந்த சீரியல் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அயிலா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் பிஸியாக நடித்து வரும் இந்த காதல் ஜோடி, சோஷியல் மீடியாவிலும் மிக பிரபலம். இவர்கள் போடும் பாஸ்ட் ஒவ்வொன்றும் லைக்குகளை அள்ளும்.

சீரியலில் இருந்து விலகிய ஆலியா
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலிலும் சந்தியா என்ற லீட் ரோலில் நடித்து வந்தார் ஆலியா. ஆனால் ஹீரோவாக சித்து நடித்து வருகிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாவது முறை கர்ப்பமான ஆலியா, தொடர்ந்து பெரிய வயிற்றை புடவையால் மறைத்த படி நடித்து வந்தார். இவருக்கு பிரசவ காலம் நெருங்கியதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும், அதுவரை சந்தியாவாக ரியா நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. சில மாத விடுமுறைக்கு பிறகு ஆலியா மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் தொடர்வார் என கூறப்பட்டது.

ஆலியாவிற்கு ஆண் குழந்தை
சமீபத்தில் புதிய சந்தியாவும் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் ஆலியாவிற்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஆலியா, சஞ்சீவ் இருவரும் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர். குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாகவும் போஸ்ட் போட்டனர். அதே சமயம், தான் திரும்பி வரவே மாட்டேன் என்று ஆலியா கூறி இருந்தார்.

திரும்பி வரவே மாட்டேன்
ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆலியா, இனி ராஜா ராணி 2 சீரியலில் நான் திரும்பி வரவே மாட்டேன். புதிய சந்தியாவாக நடித்து வரும் ரியா தான் இந்த சீரியல் முடியும் வரை சந்தியா கேரக்டரில் தொடர்வார் என ஆலியாவே உறுதிப்படுத்தி உள்ளார். இதைக் கேட்டு ஆலியாவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருந்தாலும் ஆண் குழந்தை பிறந்துள்ளதற்காக இந்த தம்பதியை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











