ராஜா ராணி 2 லிருந்து வெளியேறும் ஆலியா... புதிய சந்தியா யார் தெரியுமா ?

சென்னை : ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கேரக்டரில் நடித்து வரும் ஆலியா மானசா, சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனால் புதிய சந்தியா விரைவில் என்ட்ரி கொடுக்க போகிறார். ஆனால் ரசிகர்கள் இந்த நடிகையை சந்தியா கேரக்டரில் நடிக்க வையுங்கள் என கேட்டு வருகிறார்கள்.

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இதில் லீட் ரோலாக சரவணன் ரோலில் சித்துவும், அவரது மனைவியாக சந்தியா ரோலில் ஆலியா மானசாவும் நடித்து வருகிறார்கள். இந்தியில் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பிறகு தமிழில் டப் செய்து என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிபரப்பான சீரியலின் கதை தான் ராஜா ராணி 2 சீரியலின் கதை.

ஒரு சீன் கூட மாறல

ஒரு சீன் கூட மாறல

ஸ்வீட் கடை வைத்திருக்கும் படிக்காத ஹீரோ. படிக்காதவள் என பொய் சொல்லி ஐபிஎஸ் கனவில் இருக்கும் ஹீரோயினை திருமணம் செய்து வைக்கிறார்கள். மருமகள் படித்தவள் என்ற உண்மை தெரிந்ததும் அவளை வெறுக்கும் பாரம்பரிய பழக்கங்களில் ஊறிப்போன மாமியார். பல போராட்டங்களுக்கு பிறகு மாமியாரிடம் நல்ல பேர் வாங்கும் ஹீரோயினுக்கு வீட்டில் உள்ள உறவுகள் பல இடைஞ்சல்கள் தர, அனைத்தையும் தாண்டி கணவரின் உதவியுடன் படித்து, ஐபிஎஸ் அதிகாரி ஆகும் பெண்ணின் கதை. ஒரு சீனை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்துள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் ஆலியா

கர்ப்பமாக இருக்கும் ஆலியா

இதில் லீட் ரோலான சந்தியா கேரக்டரில் நடித்து வரும் ஆலியா மானசா, தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். ராஜா ராணி சீசன் 1 ல் சீரியலில் அறிமகமான ஆலியா, அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே அயிலா என்ற பெண் குழந்தை உள்ளார். ஆலியா தற்போது மீண்டும் கர்ப்பமாக இருந்தால் அவர் இனி சீரியலில் நடிக்க மாட்டார் என ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் பெரிய வயிற்றை புடவையில் மறைத்தபடி தொடர்ந்து நடித்து வருகிறார் ஆலியா.

ராஜா ராணி 2 லிருந்து விலகும் ஆலியா

ராஜா ராணி 2 லிருந்து விலகும் ஆலியா

இதனால் சீரியலிலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக காட்டுவார்கள் என்றார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. தற்போது ஆலியாவிற்கு பிரசவ தேதி நெருங்குவதால் அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம். ஆனால் பிரசவத்திற்காக தற்காலிகமாக தான் விடுமுறையில் செல்கிறாராம். பிரசவம் முடிந்ததும் மீண்டும் சீரியலுக்கு திரும்பி வந்து விடுவாராம்.

விரைவில் புதிய சந்தியா என்ட்ரி

விரைவில் புதிய சந்தியா என்ட்ரி

ஆனால் சீரியலில் தற்போது சந்தியா கேரக்டர், ஐபிஎஸ் படிக்க போகும் கட்டம். சந்தியா கேரக்டரை சுற்றியே கதை நகர்வதால், ஆலியாவிற்கு பதில் வேறு ஒருவரை சந்தியா கேரக்டரில் நடிக்க வைக்க போகிறார்களாம். விரைவில் புதிய சந்தியா என்ட்ரியாகும் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாம். அதற்கு முன் புதிய சந்தியா என்ட்ரிக்கான ப்ரோமோவும் வெளியிடப்பட உள்ளதாம். புதிய சந்தியா யார் என்பதை தொடர்ந்து சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.

அவர் வேணாம்; இவரை கொண்டு வாங்க

அவர் வேணாம்; இவரை கொண்டு வாங்க

அதே சமயம் ஆலியா திரும்பி வந்தாலும் அவர் வேண்டாம். ஐபிஎஸ் ரோலுக்கு அவர் செட் ஆக மாட்டார். சந்தியா ரோலில் அவர் சரியாக நடிக்கவில்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சந்தியா ரோலில் சித்துவின் நிஜ மனைவி ஸ்ரேயாவை நடிக்க வைக்கும் படி கேட்டு வருகிறார்கள். சித்துவின் மனைவி ஸ்ரேயாவை தான் புதிய சந்தியாவாக நடிக்க வைக்க சீரியல் டீமும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X