twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Amman Films: அம்மனோ சாமியோ.. ஆடி மாதமும்... டிவியில் ஓடும் அம்மன் படங்களும்!

    |

    சென்னை: ஆடிமாதத்தை முன்னிட்டு சனி ஞாயிற்று கிழமைகளில் அங்கங்கு கூழ் ஊற்றி வருகிறார்கள். அதோடு சன் டிவியில் கடந்த இரண்டு வெள்ளிக் கிழமைகளாக அம்மன் படங்களாக ஒளிபரப்பி வருகிறார்கள். நேற்று பாளையத்து அம்மன் படத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நடிகை மீனா நடித்து இருக்கார்.

    நடிகை மீனாவை அம்மன் வேடத்தில் பார்க்கும் போது அம்மனாக நடித்த நடிகைகளில் யார் ரொம்ப பக்தர்களுக்கு அருளை வர செய்து பொருத்தமாக நடித்து இருந்தார்கள் என்றும், உண்மையில் எந்த நடிகையின் அம்மன் வேடம் நிஜத்தில் அம்மன் போல இருந்தது என்றும் அலசிப் பார்க்கலாம்.

    அம்மன் வேடத்தில் நடிப்பது என்பதும் அம்மனைப் பற்றிய கதையை எழுதி படம் எடுப்பது என்பதும் சாதாரணமான விஷயம் இல்லை. இதை எல்லாம் சவால்களாக ஏற்றுத்தான் அம்மன் பற்றிய படங்கள் வெளிவந்தன.

    பொன்னியின் செல்வன் படத்தில் புக்கான 'ஆடை' யில்லா நடிகை! பொன்னியின் செல்வன் படத்தில் புக்கான 'ஆடை' யில்லா நடிகை!

     நடிகர் திலகம் காலத்தில்

    நடிகர் திலகம் காலத்தில்

    நடிகர் திலகம் சிவாஜி காலத்தில் சாமி படம் என்றால், அது தமிழ் கடவுள் முருகன், சிவன், பார்வதி, நாயன்மார்கள் பின்னணி கொண்ட கதைகளைக் கொண்ட படமாகத்தான் இருக்கும். முருகன் சூரனை வதம் செய்த கதைகள் என்று இப்படித்தான் இருக்கும். திருவிளையாடல் படத்தில் சாவித்திரி பார்வதி அம்மனாக நடித்திருப்பார். தெய்வீகக் கலையை கொண்டு வந்திருப்பார். அதற்குப் பின் நடிகர் சிவகுமார் முருகனாக நடிக்கும் படங்களில் வள்ளி, தெய்வானை வேடங்களில் நடிகை கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்து இருப்பார்கள். இதில், ஜெயலலிதாவை விட கே.ஆர்.விஜயா சாமி வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார்.

     அம்மன் வேடத்துக்கு

    அம்மன் வேடத்துக்கு

    ஒரு காலத்தில் அம்மன் படங்கள் நிறைய வந்தன.காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் என்று. இந்த படங்களில் எல்லாம் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு அமைதியான அம்மன் வேடங்கள், ஆக்ரோஷமான அம்மன் வேடங்கள் என்று கொடுத்து நடிக்க வைத்திருப்பார்கள். அம்மன் வேடமா கூப்பிடுங்கள் கே.ஆர்.விஜயாவை என்று கூப்பிடும் காலம்போயி, கே.ஆர்.விஜயா அம்மனாக நடிக்கணும். அதுக்கு கதை பண்ணுங்க என்று கேட்கும் அளவுக்கு நிலைமை ஆனது.

     நடிகை நளினி

    நடிகை நளினி

    கே.ஆர். விஜயாவுக்குப் பிறகு நடிகை என்று பெரும் புகழ் பெற்றவர் நடிகை நளினி.சமயபுரத்தாளே சாட்சி என்று ஒரு படம். எல்லாரையும் தூக்கி சாப்பிட்ட ஒரு உருவம் போல கனக் கச்சிதமாக அமைந்தது நளினிக்கு சமயபுரத்து அம்மன் வேடம். மக்கள் அலை அலையாக கூட்டம் கூட்டமாக சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தார்கள்.லட்சம் பெண்களுக்கு மேல் அந்த படத்தை பார்க்கும்போது அருள் வந்தது. தியேட்டரில் கற்பூரம் காமிக்க ரெடியாக இருந்த காலங்கள் உண்டு.

     நளினிக்கு அப்புறம்

    நளினிக்கு அப்புறம்

    நளினிக்கு அப்புறம் அம்மனாக நடிக்க நடிகை ரோஜா, மீனா, சங்கவி என்று பலர் நடித்து இருந்தாலும், அம்மன்படத்தில் அம்மனாக நடித்த ரம்யா கிருஷ்ணன்தான் தான் அந்த வெற்றிடத்தை நிரப்பினார். அவர் நல்ல பரத நாட்டிய நடிகை என்பதாலும் அவள் உருவத்தில் ஒரு கம்பீரம் இருந்தது என்பதாலும், அவரித்து குரல் ஓங்கி அதே சமயம் அருமையான பெண் குரலில் அம்மன் பேசுவது போல இருந்தது என்பதும்தான் ரம்யா கிருஷணனை இப்படி தேர்வு செய்யக் காரணம்.

    English summary
    Amman films are being aired on Sun TV for the last two Fridays. Yesterday, Palayattu Amman aired the film. Actress Meena is playing the role of Amman in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X