»   »  சந்து கேப்பில் 'டிடி'யின் இடத்தை பிடித்த சேட்டைக்கார ஆர்யா

சந்து கேப்பில் 'டிடி'யின் இடத்தை பிடித்த சேட்டைக்கார ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்புடன் டிடி நிகழ்ச்சிக்கு வந்த ஆர்யா அதை அன்புடன் ஆர்யாவாக மாற்றிவிட்டார்.

டிடி எனப்படும் திவ்யதர்ஷினி காபி வித் டிடி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். தற்போது அந்த நிகழ்ச்சி புதுவடிவம் பெற்று அன்புடன் டிடி என்ற பெயரில் மீண்டும் நடந்து வருகிறது.

அன்புடன் டிடி நிகழ்ச்சியின் முதல் சிறப்பு விருந்தினர் சிவகார்த்திகேயன்.

 ஆர்யா

ஆர்யா

அன்புடன் டிடி நிகழ்ச்சியில் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டிடி மேக்கப் போட்டு ரெடியாகிவிட்டு ஓய்வெடுக்க அந்த கேப்பில் ஆர்யா நிகழ்ச்சிக்கு அரங்கிற்கு வந்துவிட்டார்.

 அன்புடன் ஆர்யா

அன்புடன் ஆர்யா

டிடி வந்து வரவேற்கும் முன்பு அரங்கிற்கு வந்த ஆர்யா அன்புடன் ஆர்யா நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்பதாக கூறி டிடியின் வேலையை செய்யத் துவங்கிவிட்டார்.

டிடி

டிடி

ஆர்யா தனது நிகழ்ச்சியின் பெயரை மாற்றி தொகுத்து வழங்குவது குறித்து அறிந்த டிடி பதறியடித்து வந்தார். ஆனாலும் ஆர்யா விட்டுக் கொடுப்பதாக இல்லை.

 பாடி பில்டர்ஸ்

பாடி பில்டர்ஸ்

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது, சைக்கிள் ஓட்டுவதுமாக உள்ள ஆர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடி பில்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் டிடியும் மசில்ஸ் காட்டி புகைப்படம் எடுத்தார்.

English summary
Arya has made Anbudan DD programme a different one by taking over DD place as anchor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil