»   »  விஜய் டிவியில் மறுபிரவேசம் செய்கிறார் டிடி

விஜய் டிவியில் மறுபிரவேசம் செய்கிறார் டிடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காணாமல் போயிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி டிடி ஆயுத பூஜையில் இருந்து மீண்டும் தரிசனம் தரவிருக்கிறார்.

Anchor DD Come Back with Vijay TV

இடையில் சில காரணங்களால் விஜய் டிவி நிகழ்ச்சிகள் எதிலும் தலை காட்டாத திவ்யதர்ஷினி தற்போது மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார்.

சமீபத்தில் இதற்காக நடிகர் விக்ரம் மற்றும் சமந்தா ஆகியோரை வைத்து காபி வித் டிடி நிகழ்ச்சியை படம் பிடித்திருக்கின்றனர். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டிடி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Anchor DD Come Back with Vijay TV

ஆயுத பூஜை தினத்தில் சீயான் விக்ரம் மற்றும் சமந்தாவின் கலந்துரையாடலை காணத் தயாராகுங்கள் என்று இந்தத் தகவலை விஜய் டிவியும் உறுதி செய்திருக்கிறது.

மொத்தத்தில் ஆயுத பூஜை தினத்தில் இருந்து மீண்டும் விஜய் டிவியில் தனது திருப்பணியை தொடங்கவிருக்கிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

English summary
After a Long Time Anchor DD to Come Back with Vijay TV in Coffee with DD Show. She took to Twitter and Wrote "Well v hav a ayudha pooja SPL koffeewithdd KWDD Can't wait for u guys to watch it cos my guests r Samanthaprabhu2 thnx a mil n 2ndguest??".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil