»   »  கணவருடன் சந்தோஷமாக இருக்கிறார் டிடி... பிரியவில்லை.. பிஆர்ஓ மறுப்பு

கணவருடன் சந்தோஷமாக இருக்கிறார் டிடி... பிரியவில்லை.. பிஆர்ஓ மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினியும், அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடிக்கும், இயக்குனர் கவுதம் மேனனிடம் துணை இயக்குனராக இருந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் டிடிக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சனையாம் என்றும், அவர்கள் பிரிந்துவிட்டனர் என்றும் செய்திகள் வெளியாகின.

Anchor DD is not getting divorced

அவர்கள் விரைவில் விவாகரத்து பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூட கூறப்பட்டது. பிரிந்து வாழ்வதாலேயே அவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து டிடியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

இது எல்லாம் ஆதராமற்ற வதந்திகள். டிடியும், அவரது கணவரும் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். யார் தான் இதுபோன்ற வதந்திகளை பரப்புவது என்றே தெரியவில்லை என்றார்.

English summary
Anchor Divyadarshini's spokesperson said that she and her husband are happily living together and not planning to get divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil