Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இம்முறையும் விஜய் டிவி புராடெக்ட்ஸ்.. பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி?
சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆயுத பூஜைக்கு வெளியாகும் ஆர்யாவின் அரண்மனை 3!
ஏற்கனவே பிக்பாஸ் லோகோவுக்கான ப்ரோமோ வெளியான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானது.

கல்யாண வீடு கலாட்டா
இதில் கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள் காட்சியாக்கப்பட்டிருந்தது. புரமோவில் பேசிய கமல் ஹாசன் ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ற கல்யாண வீட்டிலேயே இவ்ளோ கலாட்டா இருக்கும் போது என இழுத்து முடித்திருந்தார்.

கலாட்டாவும் பெருசு
மேலும் பிக்பாஸ் வீட்டை குறிப்பிட்டு இங்க வீடும் பெருசு கலாட்டாவும் பெருசு என்றும் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கூறி முடித்திருந்தார். இந்த புரமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் நகைக்கடை விளம்பரம் போல் உள்ளது என்ற விமர்சனமும் எழுந்தது.

நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தை
பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார்? யாரிடம் எல்லாம் நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்பது குறித்து நாள்தோறும் தகவல் பரவி வருகிறது.

விஜய் டிவி தொகுப்பாளர்
அந்த வகையில் நடிகை சூசன், நடிகை சாந்தினி, நடிகர் அபினய் மற்றும் ஆர்ஜே வினோத் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவரான பிரியங்கா தேஷ்பாண்டேவும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனி ரசிகர் பட்டாளம்
பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்காவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு தொகுப்பாளர்
இந்நிலையில் நடிகை பிரியங்காக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு தொகுப்பாளர் பங்கேற்று வருகிறார்.

டேமெஜ்ஜான அர்ச்சனா
கடந்த சீசனில் அர்ச்சனா, ரியோராஜ், அனிதா சம்பத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் அர்ச்சனா தனக்கென ஒரு குரூப்பை ஃபார்ம் செய்து கொண்டு ஆரியை கார்னர் செய்தார். இதனால் அவரது பெயர் டேமெஜ்ஜானது. அதோடு கடும் விமர்சனத்துக்கும் ஆளானார் அர்ச்சனா.

விஜய் டிவி புராடெக்ட்
இந்நிலையில் பிரியங்கா பங்கேற்பதாக வெளியான தகவலை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனா போல் இவரும் தனது பெயரை கெடுத்துக்கொள்ள போகிறார் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், அவர் விஜய் டிவி புராடெக்ட் என்பதால் அவரை நல்லவராகத்தான் கடைசி வரை காட்டுவார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

மக்களின் வெறுப்பை தாண்டி
இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்று வருகின்றனர். அவர்கள் டைட்டில் வின்னர் ஆகிறார்களோ இல்லையோ கடைசி வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பார்கள். சில சமயங்களில் மக்கள் ஓட்டையும் மீறி மக்களின் வெறுப்பையும் தாண்டி அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நினைவு கூறத்தக்கது.