twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலேஜ் போனா லவ் பண்ணலாம்... அதிர வைக்கும் மழலைகள்

    By Mayura Akilan
    |

    பதின்பருவத்தில் காதலைப் பற்றி பேசிய காலம் போய் இன்றைக்கு மழலைகளே காதலைப் பற்றி பேசும் காலம் வந்துவிட்டது. இதற்கு காரணம் ஊடகங்கள்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    வீடுகளில் பேசிய காலம் போய் உலகம் முழுவதும் பார்க்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பங்கேற்ற குழந்தை ஒன்று காதல் பற்றி பகிரங்கமாக பேசியதுதான் அதிர்ச்சியளிக்கும் விசயம். ஞாயிறன்று சன் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டி நிகழ்ச்சியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    காலேஜ் போனா காதலிக்கலாம்

    காலேஜ் போனா காதலிக்கலாம்

    "நீ ஸ்கூல் படிக்கப் போறியா? காலேஜ் படிக்கப் போறியா?" இது டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தையிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி கேட்ட கேள்வி. ஆனால் அதற்கு அந்த குழந்தை "நான் காலேஜ்தான் போவேன்" என்று கூறியது.

    அண்ணாச்சியும் விடாமல் " ஏன் காலேஜ் போகணும்?" என்று கேட்க, "காலேஜ் போனா லவ் பண்ணலாமே" என்று சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னது அந்த குழந்தை. இதை சொல்லிக்கொடுத்தது பக்கத்து வீட்டு அங்கிள் என்றும் சொன்னது.

    பிஞ்சு மனதில் நஞ்சு

    பிஞ்சு மனதில் நஞ்சு

    யுகேஜியோ, ஒன்னாவதோ படிக்கும் அந்த குழந்தை உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று பெற்றோர்கள் முன்னிலையில் இதனை சொன்னதுதான் அதிர்ச்சியான விசயம். குழந்தை சொல்வதைக் கேட்டு பெற்றோர்கள் சிரிக்கும் ரியக்சனையும் போடுகின்றனர். இதில் யாரை குற்றம் சொல்ல முடியும். மழலை பருவத்தில் காதல் பற்றி பேசும் குழந்தைகளையா? அல்லது பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்தவர்களையா?

    அப்பங்காரனும்… மாமன்காரனும்….

    அப்பங்காரனும்… மாமன்காரனும்….

    இதை விட ஒரு படி மேலே போய் மற்றொரு குழந்தை பேசியது. வீட்டில் அந்த குழந்தையின் அப்பாவும், தாய்மாமாவும் சிகரெட் பிடித்துக்கொண்டு மது அருந்தியிருக்கின்றனர். பின்னர் கட்டிபுரண்டு சண்டை போட்டிருக்கின்றனர். இது அந்த குழந்தையில் மனதில் பதிந்துவிட்டது. அதை டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பேசும் போது எங்க அப்பங்காரனும், அம்மாவோட அண்ணங்காரனும் சிகரெட் புடிச்சிட்டு.... டிரிங்க்ஸ் சாப்டுட்டு சண்டை போடுவாங்க என்று கூறியது வேதனையின் உச்சம்

    குழந்தைகளை திட்டும் பெற்றவர்கள்

    குழந்தைகளை திட்டும் பெற்றவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் அனைவரும் தங்களை பெற்றோர்கள் திட்டுவதாக தெரிவித்தனர். அதுவும் சொல்லி வைத்த மாதிரி வெளியில போ... சனியனே, என் கண் முன்னாடி நிற்காதே என்றும் அப்பா திட்டுவதாக கூறினர். பெற்றோர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

    அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியாக மாறுமா?

    அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியாக மாறுமா?

    வீட்டில் நடக்கும் பெர்சனல் விசயங்களை இப்படி உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கிறது சுட்டிக் குட்டீஸ் நிகழ்ச்சி. குழந்தைகளுக்கு என்று பல தனித்திறமைகள் உள்ளன. அவற்றை வெளிப்படுத்தும் விதமான கேள்விகளை கேட்பதை விட்டுவிட்டு அப்பா, அம்மா சண்டை போட்டா யார் ஜெயிப்பாங்க? காலேஜ் போனா காதலிக்கலாம் போன்ற தேவையற்ற கேள்விகளை ஏன் கேட்கிறார் இமான் அண்ணாச்சி என்றுதான் தெரியவில்லை.

    ஊடகங்கள்தான் காரணம்

    ஊடகங்கள்தான் காரணம்

    மழலைகள் கூட காதலைப்பற்றி பேசுவதற்கு காரணம் ஊடகங்கள்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    1980, 1990களில் சினிமாக்களின் மூலம் வெட்டவெளிச்சமாக்கப்பட்ட காதல் இன்றைக்கு தொலைக்காட்சிகளின் மூலம் நடுக்கூடத்தில் அனைவரின் பார்வைக்கும் வருகிறது. இதனால்தான் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது நர்சரி பள்ளிகளில் படிக்கும் மழலைகள் கூட இன்றைக்கு காதலைப் பற்றி பேசுகின்றனர். காதல் பாடல்களை வரி மாறாமல் மனப்பாடம் செய்து பாடுகின்றனர். இதற்குக் காரணம் ஊடகங்கள்தான் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.

    English summary
    Sun TV's Kutti chutti programme has created new controversy among the TV viewers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X