»   »  யூடியூபில் வலம் வரும் தெய்வமகள் "அண்ணியார்" காயத்ரியின் மறுபக்கம்..!

யூடியூபில் வலம் வரும் தெய்வமகள் "அண்ணியார்" காயத்ரியின் மறுபக்கம்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அண்ணியாரே... இது தெய்வமகள் வில்லி காயத்ரியைப் பார்த்து ஹீரோ பிரகாஷ் கூப்பிடும் ஸ்டைல். இப்போது பெரும்பாலான வீடுகளை அண்ணியை இப்படித்தான் அழைக்கிறார்களாம். அந்த அளவிற்கு பிரபலமான அண்ணியார் இப்போது ஜெயிலில் இருக்கிறார் ஆனாலும் நம்பியுடன் இணைந்து இன்னமும் யாரை கவிழ்ப்பது என்று திட்டம் தீட்டி வருகிறார். என்னதான் காயத்ரி வில்லியாக நடித்தாலும் அவரது அறியப்படாத புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு தற்போது யூடியூபில் வலம் வந்து கொண்டுள்ளது.

காயத்திரியின் ஒரிஜினல் பெயர் ரேகா கிருஷ்ணப்பா . கன்னட திரைப்படம் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ரேகா கிருஷ்ணப்பா, மலையாள தொடருக்கும் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு தற்போது தமிழ் சீரியல்களில் வில்லியாக முகாமிட்டிருக்கிறார்.

நடிப்புத் துறையில் 20 வருட அனுபவமிக்க சீனியர். பாரிஜாதம் தொடரில் வில்லியாக நடித்தவர் தற்போது தெய்வமகளில் வில்லியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளம்,கன்னடம் என மூன்று மொழி சீரியல்களிலும் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கும் நடிகை ரேகாவிற்கு இது தனது நடிப்பிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்.

 வில்லியாக நடிப்பேன்

வில்லியாக நடிப்பேன்

கன்னட சீரியல்களில் இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் ரேகா. தெய்வமகள் தொடரில் காயத்திரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். "வில்லியாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வில்லியாகத்தான் நடிப்பேன்" என்கிறார் ரேகா குமார்.

 கன்னட சினிமா

கன்னட சினிமா

நான் நடிகையாக அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். கன்னட சீரியல்களில் நடித்தேன். அதை பார்த்து விட்டு மலையாள சீரியல்களில் வாய்ப்பு வந்தது.

 வில்லிதான் பெஸ்ட்

வில்லிதான் பெஸ்ட்

தெய்வதிருமகள் சீரியல் வந்தது. மூன்று மொழிகளிலும் வில்லி கேரக்டர் என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள்.

வாழ்க்கையில் பாசிட்டிவாக இருக்கும்போது சீரியலில் நெகட்டிவாக நடிக்கத்தான் பிடிச்சிருக்கு.

 சினிமாவில் வில்லி

சினிமாவில் வில்லி

கன்னடத்தில் 40 தொடர்களிலும், மலையாளத்தில் 10 தொடர்களிலும் வில்லியாக நடித்த ரேகா கிருஷ்ணப்பா, சின்னத்திரையின் நிரந்தர வில்லி. தமிழ் சினிமாவில் பவர்புல் வில்லியாக புகழ்பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளது. என்கிறார் ரேகா.

வைரல் புகைப்படத் தொகுப்பு

ரேகாவின் வில்லத்தனமான நடிப்பை பார்த்து இல்லத்தரசிகள் திட்டினாலும் ரேகாவிற்கு ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அவர் திரைப்பட நடிகையாக இருந்த போது எடுத்த போட்டோக்கள் இப்போது யூடியூபில் வலம் வருகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர்.

 வீட்டிலும் வில்லி மூடுதான்

வீட்டிலும் வில்லி மூடுதான்

தொடர்ந்து வில்லி வேடங்களில் தினமும் நடிப்பதால் வீட்டிற்கு சென்றாலும் வில்லி மூடுதான் இருக்கிறதாம். என்னதான் வீட்டில் கணவர், குழந்தைகளுடன் கொஞ்சினாலும் அதிகம் கோபம் வருகிறதாம்.

 தியானம் செய்யும் காயத்ரி

தியானம் செய்யும் காயத்ரி

வில்லி கேரக்டர்களின் எபெக்ட் வீட்டுக்குள் வராமல் இருக்க தினமும் காலை மாலையில் தியானம் செய்கிறாராம். தற்போது அது நல்ல பலன் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார் ரேகா கிருஷ்ணப்பா.

இப்போ குண்டு வில்லியாக இருக்கும் அண்ணியார் முன்பு ஒல்லியாக இருந்திருக்கிறார்.. புகைப்படத் தொகுப்பு நல்லாதான் இருக்கு!

English summary
Deivamagal Gayathri original name Rekha is a Tamil TV serial actress. She acted in more than 40 serials. She has acted in almost all south Indian languages such as Kannada, Telugu, Tamil and Malayalam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil