பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வர போகும் ட்விஸ்ட் இது தான்

சென்னை : பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்ததாக மற்றொரு ட்விஸ்ட் நடைபெற உள்ளதாம். இது தொடர்பான ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. டைட்டில் ரோலான கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி பிரியன் துவங்கி இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் மாற்றப்பட்டு விட்டனர். இதனால் டாப் இடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது டல் அடிக்கிறது.

Recommended Video

Bharathi Kannamma-வில் அடுத்து வரப்போகும் Twist!..| Filmibeat Tamil
எல்லாமே மாறிடுச்சேப்பா

எல்லாமே மாறிடுச்சேப்பா

பாரதியை பிரிந்த கண்ணம்மா, பெண் குழந்தையுடன் சமையல் வேலை செய்து கஷ்டப்படுவதாக கொஞ்ச நாள் காட்டினார்கள். பிறகு திடீரென அவர் ஒரு பெரிய மருத்துவமனைக்கு ஏஓ ஆவதாக மாற்றி விட்டார்கள். பாரதியை திருமணம் செய்ய பல சதி வேலைகள் செய்த வில்லி வெண்பா, தற்போது காமெடி பீஸ் போல் காட்டப்பட்டு வருகிறார்கள். குழந்தை ஹேமா மற்றும் லட்சுமியை வைத்து பல வாரங்கள் ஓட்டினார்கள். கடைசியாக லட்சுமிக்கு தனது அப்பா யார் என்ற உண்மை தெரிந்து விட்டதாக காட்டி வருகிறார்கள்.

இது தான் தற்போதைய நிலை

இது தான் தற்போதைய நிலை

இதுவரை ஒளிபரப்பான எபிசோட்களின்படி, பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதைத் தெரிந்து குழந்தை லட்சுமி வேதனைபடுகிறாள். மற்றொரு பக்கம், லட்சுமிக்கு உண்மை தெரிவதற்குள் விவாகரத்து வாங்க துடிக்கிறார் பாரதி. இன்னொரு பக்கம் அம்மாவிடம் மாட்டிக் கொண்டு, அவர் பார்க்கும் மாப்பிள்ளைகளை பல தில்லாலங்கடி வேலைகள் செய்து விரட்டி அடித்து வருகிறார் வெண்பா.

பாரதி கண்ணம்மாவில் அடுத்த ட்விஸ்ட்

பாரதி கண்ணம்மாவில் அடுத்த ட்விஸ்ட்

இந்த சீரியலை எப்போது முடிப்பார்கள் என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு போராக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் விரைவில் புது என்ட்ரி நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் வெண்பாவின் அம்மா ஷர்மிளா, அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார் என நடிகை ரேகா என்ட்ரி ஆனார். இந்த சமயத்தில் வெண்பாவை காதலித்து, திருமணம் செய்ய விரும்பும் கேரக்டராக நடிகர் சபரிநாதன் விரைவில் என்ட்ரியாக உள்ளார்.

 அட அவர் தான் இவர்

அட அவர் தான் இவர்

நடிகர் சபரி வேறு யாரும் இல்லை. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியலில் லீட் ரோலில் நடித்தவர் தான். இவர் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த புது வரவு. ஆனால் இவர் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறாரா அல்லது வெண்பாவிற்கு ஜோடியாக வர போகிறவர் இவர் தானா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X