Just In
- 26 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 56 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
roja serial: ஒரு வழியா அணு அஷ்வின் கல்யாணம் நின்னு போச்சு!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலா சன் டிவி ஒரு மணி நேரத்தை ஒதுக்கியும் நிக்காத அணு அஷ்வின் கல்யாணம், ரெண்டு வாரத்துக்குப் பிறகு நின்னு போச்சு. அதுவும் கல்யாண மண்டபம் காட்சிகளே ரெண்டு வாரமா இழுவையில் இருந்தது.
சன் டிவியின் ரோஜா சீரியலில் குல்ஃபி மாதிரி ஹீரோயின் ரோஜா... கல்லூரிப் பெண்கள் பார்த்தவுடன் ஆசைப்பட்டு செல்ஃபி எடுத்துக்கற மாதிரி ஹீரோ அர்ஜுன் என்று ரெண்டு பேரும் இருக்காங்க. அதிலும் இவங்க ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் வைப்பாங்க பாருங்க...சீரியல் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டுத்தான்!
ஆனா, அது எல்லாம் கொஞ்ச நாளா இல்லாம அணு அஷ்வின் கல்யாணம்.. இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தப் போறோம்னு அர்ஜுன் ரோஜா பிளான் போடறதுன்னே கல்யாண மண்டபத்தில் ரெண்டு வாரம் இருந்துச்சு.

அஷ்வின் அணு
அணு ஜெயிலுக்கு போகாம தான் தப்பிக்கணும்னா அஷ்வினை கல்யாணம் செய்துகிட்டு, அன்னபூரணி பாட்டி வீட்டில் தஞ்சம் அடைந்தால்தான் ஆச்சு என்று ரெண்டாவது பிளான் போட்டுவிடுகிறாள். முதல் பிளான் அர்ஜுனை கல்யாணம் செய்துக்கறதுன்னு போட்டது. அவன் உஷாராகி தப்பிச்சான். ரோஜாவை கல்யாணம் செய்துக்கொண்டு வந்துட்டான்.
Rasaathi Serial: கவர்ச்சி கவுனா... புடவையா...எது ராசாத்தி சாய்ஸ்?

வைஃபி குல்ஃபி
ரோஜாவை அர்ஜுன் ஆசையா குல்ஃபின்னு கூப்பிடறதும். திடீர்னு வைஃபின்னு கூப்பிடறதும் என்று, அர்ஜுன் ரோஜா ரொமான்ஸ் வைக்கறதும்... பாட்டியை வெறுப்பேத்த அர்ஜுன் வசனம் பேசுவதும் என்று வீட்டுக்குள்ளேயே ஒரு எபிசோட் முழுவதுமான காட்சி என்றாலும் வசனத்தை வைத்து சமாளித்து விடுகிறார் இயக்குநர்.

கல்யாண மண்டபம்
கல்யாண மண்டபத்தில் கல்பனா, ரோஜா, அணு, யசோதா, பாலு, அன்னபூரணி, காமாட்சி என்று அனைவருக்கும் சரி சமமா வசனம், காட்சி என்று நடிக்க வைத்து எடுத்து இருப்பதால்தான் ரெண்டு வாரமா கல்யாண மண்டப காட்சிகள் இருந்தாலும், பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டவில்லை. விதம் விதமான... கலர் கலரான பட்டுப் புடவையில் பெண்கள் வளைய வரும் கல்யாண மண்டப காட்சி எப்போதுமே சலிப்புத் தட்டாதுதானே!

உயிரோடு பூஜா
பூஜாவை கடத்தி வச்சு, தான் அஷ்வின் மாமாவை கல்யாணம் செய்துக்கணும்னு சாக்ஷியுடன் சேர்ந்து திட்டம் போடும் அணுவின் திட்டம் போலீஸ், மற்றும் அர்ஜுனுக்கு தெரிஞ்சு போகுது. சாக்ஷி பூஜாவை சவப்பெட்டியில் வச்சு புதைத்து விட, சினிமாவையும் மிஞ்சும் செம சீன் போட்டு அர்ஜுன், இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா இருவரும் காப்பாத்திடறாங்க. புதைக்கப்பட்ட பூஜா உயிரோடு கிடைச்சுடறா.

ஒளிபரப்பில் ஒன்னு
ப்ரோமோவில் ஒன்னு... ஒளிபரப்பில் ஒன்னு என்று சீரியல் ஆர்வலர்களை பகீர் ஆக்கிருச்சு ப்ரோமோ. அஷ்வின் அனுவின் கழுத்தில் தாலியே கட்டி விட்டது போல் ப்ரோமோ காட்டிட்டு, ஒளிபரப்பில் தாலியை கழுத்தில் வச்சு முடிச்சு போட போறான் அஷ்வின். அப்போதுதான் நிறுத்துங்கன்னு அர்ஜுன் கத்த கல்யாணம் நின்னு போச்சு.