»   »  பிக் பாஸை மக்கள் ஏன் பார்க்கிறார்கள், அதன் வெற்றியின் ரகசியம் என்ன?: அனுயா பேட்டி

பிக் பாஸை மக்கள் ஏன் பார்க்கிறார்கள், அதன் வெற்றியின் ரகசியம் என்ன?: அனுயா பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அனுயா.

உலக நாயகன் கமல் ஹாஸன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் கழுவிக் கழுவி ஊத்தினாலும் தவறாமல் பார்க்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக அனுயா வெளியேற்றப்பட்டார்.

அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறியிருப்பதாவது,

நிம்மதி

நிம்மதி

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகே நிம்மதியாக உள்ளது. பாத்ரூம் தவிர அனைத்து இடங்களிலும் கேமரா உள்ளது. நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பது வக்கிரமானது.

பிக் பாஸ்

பிக் பாஸ்

அடுத்தவர்கள் வீட்டில் நடப்பதை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. நம் வீட்டில் நடப்பது போன்று தான் பிக் பாஸ் வீட்டிலும் நடப்பதால் மக்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.

வெற்றி

வெற்றி

அடுத்தவர்கள் வீட்டு பிரச்சனையை தெரிந்து கொண்டு நாம் அதை விட நன்றாக இருக்கிறோம் என்று நினைத்து மகிழும் மனப்பான்மை மக்களுக்கு உள்ளது. அது தான் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறக் காரணம்.

மக்கள்

மக்கள்

அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அப்பாடா நமக்கு அந்த பிரச்சனை இல்லை என்று மக்கள் மகிழ்வதாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்கிறார் அனுயா.

English summary
Actress Anuya has revealed two secrets about the ongoing Big Boss programme. Anuya got evicted from the Big Boss house last week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil