Robo Shankar: ரோபோ சங்கர் பற்றி அதை ஏன் பேச மாட்டேங்கிறீங்க.. பிரபலம் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
சென்னை: நகைசுவை நடிகர் ரோபோ சங்கர் கடந்த 18ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவரது 46வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். பல முன்னணி நடிகர்கள் தொடங்கி, சின்னத்திரை நடிகர்கள் வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மரணத்திற்கு பலரும் பல காரணங்களை சொல்லி பேசி வந்தார்கள். இப்படி இருக்கும் போது அவருடன் பணியாற்றியவரும் நகைச்சுவை நடிகையுமான அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவரது பதிவில், ஒருவர் மறைந்து விட்டால் அவர் குறித்த சிறப்பானவற்றை பேசுங்கள் எனவும், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி ஆடியது தொடர்பாக பலரும் மோசமாக விமர்சித்தனர். அதற்கும் அதில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நன்றியும் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " ஒருத்தர் இறந்து விட்டால், அவரைப் பற்றி நல்லது மட்டும் பகிர்ந்து போறதுதான் மனிதனுக்கு அழகு. தன்னோட கணவன் இறப்பில் அந்த பெண் ஆடுனது தவறா? இல்லை ஒரு பெண் ஆடினதே தவறா?, காதலை எப்படி வேணாலும் வெளிப்படுத்தலாம் ஆனால் வருத்தத்தை அவ இப்படி வெளிப்படுத்தினது எனக்கு தவறா தெரியல. காரணம், அவங்க காதலிச்ச மேடையே ஒரு நடன மேடைதான்.
குடும்பம்: அந்த இறுதி பயணத்தில் தன் காதலோடு சேர்த்து தன்னுடைய நடனத்தையும் அவருக்காக கொடுத்தது என்ன பொறுத்த வரைக்கும் ஒரு நல்ல காதலுக்கு அழகு. எப்பவும் உங்களை குண்டு பையன் குண்டு பையன் சொல்லி.. ரோபோ உங்க நினைவுகளோடு உங்க குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த பதிவைப் பகிர்ந்த இந்திரஜா சங்கர், அறந்தாங்கி நிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எஸ்.வி. சேகர்: பிரியங்காவின் நடனத்திற்கு திரைப்பிரபலங்கள் பலருமே கூட ஆதரவு தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக நடிகர் எஸ்.வி. சேகர் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், " ஒருவர் தனது துக்கத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது. அவர் அவரது கணவரின் இறுதி ஊர்வலத்தில் தான் ஆடினார். உங்கள் வீட்டிற்குள் வந்து ஆடவில்லை தானே. தன்னோடு வாழ்ந்த கணவனின் இறுதி ஊர்வலம். இனிமேல் அவரைப் பார்க்கவே முடியாது எனும்போது, தாளமுடியாத துக்கத்தின் வெளிப்பாடு அது. அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று பேசினார். இவரது வீடியோவும் பலரது கவனத்தை ஈர்த்தது.


Click it and Unblock the Notifications











