»   »  விஜய் டிவிக்கு வரும் அரவிந்த்சாமி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி 3

விஜய் டிவிக்கு வரும் அரவிந்த்சாமி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி 3

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் சீசன் 3 ஆரம்பிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறவர் அரவிந்த்சாமி என்கின்றனர். ஸ்டார் டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் பச்சன், ஷாருக்கான் நடத்தினர். அதேபோல விஜய் டிவியில் தொடங்கப்பட்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

நடிகர் சூர்யா தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது. இரண்டாவது சீசனை நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அரவிந்த் சாமி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தற்போது சினிமாவில் மீண்டும் பிஸியாக நடித்து வரும் அர்விந்த்சாமி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 3ஐ நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தளபதி கலெக்டர்

தளபதி கலெக்டர்

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அழகான ஹீரோ தமிழ் திரை உலகிற்கு கிடைத்து விட்டார் என்று 90களில் இளசுகள் பட்டாளம் கூறியது.

ரோஜா நாயகன்

ரோஜா நாயகன்

ரோஜா படத்தின் மூலம் அர்விந்த் சாமி ஹீரோவானார், பம்பாய் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடத்த அரவிந்த் சாமி, பிசினசை கவனிக்கப் போய்விட்டார்.

ஆள் மாறிய அரவிந்த் சாமி

ஆள் மாறிய அரவிந்த் சாமி

திருமண வாழ்க்கையில் தோல்வி, விவாகரத்து, உடல்நலம் பாதிப்பினால் குண்டாகி அந்த அரவிந்த்சாமியா இவர் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டார்.

டிவி நிகழ்ச்சியில் அசத்தல்

டிவி நிகழ்ச்சியில் அசத்தல்

நீண்ட நாட்களாக காணமல் போயிருந்த அரவிந்த் சாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய தனித்திறமை, புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்.

சினிமாவில் மீண்டும்

சினிமாவில் மீண்டும்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்த அர்விந்த்சாமியை தனி ஒருவன் அடையாளம் காட்டியது.

ஸ்டைலிஷ் வில்லன்

ஸ்டைலிஷ் வில்லன்

தனி ஒருவன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்திய அர்விந்த்சாமி இப்போது சின்னத்திரையில் நீங்களும் வெல்லலாம்ஒரு கோடி நடத்தப்போகிறார்.

விஜய் டிவியில் அர்விந்த் சாமி

விஜய் டிவியில் அர்விந்த் சாமி

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான கேள்வி ஏப்ரல் 14ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. கேள்விக்கு பதில் சொல்பவர்கள் அர்விந்த்சாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

English summary
The popular television show Neengalum Vellalaam Oru Kodi is all set to kick-start next week on Star Vijay. The third season, we hear, is likely to be hosted by none other than Arvind Swamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil