twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புது காரு.. புது பங்களா... கலக்கறீங்க நடிகைகளே.. ஆனால் ரியாலிட்டி வேற மக்களே!

    |

    சென்னை: தொலைக்காட்சி சானல்களின் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு குடும்ப பெண்கள் ஃ பேனாக மாறி இருக்கிறார்கள். கதைக்காக மட்டும் இல்லை.. நடிகைகளின் புடவை, நகைகள் என்று பார்க்கவும் இவர்கள் சீரியல் பார்த்து வருகிறார்கள்.

    தொலைக்காட்சியின் பல சீரியல்களில் நடிகைகள் நடித்து வந்தால், அவங்களுக்கென்ன.. நடிச்சு, பணம், புகழ், புது வீடு, புது கார்னு கலக்கறாங்க. நடிச்சால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூட சீரியல் ஆர்வலர்களுக்கு எண்ணம் உண்டு.

    சினிமா நடிகைகளை இவர்கள் இந்த கோணத்தில் வைத்து பார்ப்பதில்லை. அவர்கள் இவர்கள் கணக்குக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாக நினைவு ஒரு புறம் இருந்தாலும், அவர்களை பற்றி இவர்கள் எந்த விதத்திலும் நினைத்துப் பார்ப்பதில்லை.

    கேள்வி கேட்பாங்க

    கேள்வி கேட்பாங்க

    ஒரு சீரியலில் ஒரு எபிசோடில் கட்டிய புடவையை வேறு ஒரு எபிசோடில் உடுத்தினால், அந்த நடிகையை எங்காவது பார்க்க நேர்ந்தால் மறக்காமல் இந்த கேள்வியை கேட்டுவிடுவார்கள். என்னா ஒரே புடவையை அடிக்கடி கட்டறீங்களே என்று. அதோடு, காதில் எப்போதும் இதே ஜிமிக்கித்தானா? வேற மாத்துங்க.. நல்லாவே இல்லை என்றும் ஆலோசனை தருகிறார்கள்.

    நடிகைகள் கஷ்டம்

    நடிகைகள் கஷ்டம்

    சீரியல் நடிகைகளுக்கு இதனால் பல கஷ்டம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். அதாவது ரெண்டு சானல்களில் ரெண்டு சீரியலில் நடித்தால், ஒரு சானல் சீரியலுக்கு கட்டிய புடவையை இன்னொரு சானல் சீரியலுக்கு உடுத்த முடியாது. அந்த சானல் சீரியலுக்கு ஒரு செட் புடவை, ஃபேன்சி நகைகள், தலை முடி ஸ்டைல் என்று வைத்துக்கொண்டு, இன்னொரு சானல் சீரியலுக்கு இதே மாதிரி வேற செட் வச்சுக்கிட்டு என்று நாங்கள் நடிக்க வேண்டும்.

    பாதி சமபளம்

    பாதி சமபளம்

    நடிக்க வாங்கும் சம்பளத்தில் பாதி இப்படியான செலவுக்கே போய்விடும். இதெல்லாம் எங்களுக்கு கஷ்டம்தான். இதை எல்லாம் செய்தால்தான் மார்க்கெட்டில் நாங்கள் நிலைத்து நிற்க முடியும். சீரியல்களில் நடிக்கும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான சம்பளம், வேலை வாய்ப்பு என்றும் இருக்காது. அவங்கவங்க நிலைக்குத் தகுந்த மாதிரிதான் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் ஒரு நாள் சமபளம் இருக்கும்.

    நித்தம் நித்தம் இல்லை

    நித்தம் நித்தம் இல்லை

    அதே போல நித்தம் நித்தம் என்று ஷூட்டிங் இருந்தாலும் நடிகைகளுக்கு சீன் வரும்போதுதான் அவர்களுக்கான நிறைய நாள் வேலை வாய்ப்பு இருக்கும். இதனால் மாசத்தில் எப்படியும் 10 நாட்களுக்கு மேல் வேலை இல்லாமலும் இருக்கலாம். அதனால் சீரியல் நடிகைகள் பெரும் அளவில் சம்பாதிப்பார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்று நடிகைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    English summary
    Half of the salary to be cast would go to this cost. All this is difficult for us. It is only by doing this that we can be sustained in marketing. Not all people who work in serials have the same salary and job opportunities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X