அப்போ இவங்க எல்லாம் பிக்பாஸுக்கு போகலையா... உண்மையை உடைத்த சோஷியல் மீடியா

சென்னை : அதிகமான ரசிகர்களைக் கொண்ட ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 5 ல் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையில் போட்டியாளர்கள் பட்டியல் என தினம், தினம் வெளியாகும் புதுப்புது பட்டியல்களும், தகவல்களும் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது. போட்டியாளர்கள் பட்டியலில் இருக்கிறார்கள் என சொல்லப்படும் நபர்கள், முதலில் அமைதி காப்பதும், பிறகு மறுப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தனிமையில் போட்டியாளர்கள்

தனிமையில் போட்டியாளர்கள்

வரும் அக்டோபர் 3 ம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. மொத்தம் 20 பேர் போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், அவர்களின் இருந்து இறுதி போட்டியாளர் பட்டியலில் இடம்பெறும் 16 பேரை தேர்வு செய்யும் பணி மிக கவனமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. பிக்பாஸ் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இவர்கள் கன்ஃபார்ம் போட்டியாளர்களா

இவர்கள் கன்ஃபார்ம் போட்டியாளர்களா

முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனால் போட்டியாளர்கள் ஒரு வாரம் மட்டுமே தனிமைப்படுத்தி வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி ஷகீலாவின் மகள் மிலா, விஜய் டிவி பிரியங்கா ஆகியோர் தனிமையில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இவர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது கன்ஃபார்ம் என அனைவரும் முடிவுக்கு வந்தனர்.

உறுதியாக நம்பப்பட்ட பெயர்கள்

உறுதியாக நம்பப்பட்ட பெயர்கள்

முதல் கன்ஃபார்ம் போட்டியாளராக நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளும், திருநங்கையுமான மிலா கலந்து கொள்ள போவதாக கூறப்பட்டது. இதுவரை வெளியான பட்டியல்களில் எல்லாம் அவரது பெயர் உள்ளது. இதே போல் விஜய் டிவி.,யின் பிரபல தொகுப்பாளினியின் பெயரும் இடம்பெற்றது. இவர்களைத் தொடர்ந்து ஜி.பி. முத்து, கனி திரு ஆகியோரின் பெயர்களும் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் உள்ளதாக கூறப்பட்டது.

பிக்பாஸ் விதிகள்

பிக்பாஸ் விதிகள்

பிக்பாஸ் போட்டி விதிகளின் படி, போட்டியாளர்களாக தேர்வானவர்கள் அதன் பிறகு வெளியுலகில் தலை காட்ட கூடாது. யாரையும் சந்திக்கவோ, பேட்டி அளிக்கவோ கூடாது. இதே போல் தனிமையில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் மொபைல் போன், டிவி போன்றவை வழங்கப்படாது.

சோஷியல் மீடியாவில் ஃபோட்டோக்கள்

சோஷியல் மீடியாவில் ஃபோட்டோக்கள்

ஆனால் 2 நாட்களுக்கு முன் பாக்யலட்சுமி சீரியல் செட்டில், அங்குள்ள நடிகர், நடிகைகளுடன் மிலா எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானது. இதே போல் நேற்று தொடர்ந்து 6 மணி நேர நிகழ்ச்சியாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை மா கா பா உடன் இணைந்து பிரியங்கா தான் தொகுத்து வழங்கினார்.

வீடியோ வெளியிட்ட கனி

வீடியோ வெளியிட்ட கனி

இவர்கள் மட்டுமல்ல குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி திருவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று மகள்கள் தினத்தை முன்னிட்டு தனது மகள்களின் ஃபோட்டோவை பதிவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று, ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மையிலேயே மிலா, பிரியங்கா, கனி மூவரும் பிக்பாஸ் போட்டியாளராக தேர்வாகி, தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால் சோஷியல் மீடியாவில் அவர்களின் ஃபோட்டோக்கள் எப்படி வெளியாகும்.

எதிர்பாராத பட்டியல் வர போகுது

எதிர்பாராத பட்டியல் வர போகுது

பிக்பாஸ் போட்டியாளர் பட்டியல்கள் அனைத்திலும் இடம்பெற்றுள்ள இவர்கள் மூன்று பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் போகவில்லை என்பது இவர்கள் வெளியிட்ட ஃபோட்டோக்கள் மூலம் தெளிவாகி உள்ளது. வழக்கமாக பிக்பாஸ் ப்ரோமோவில் கமல் கூறுவதை போல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பாணியில் யாரும் எதிர்பார்க்காத 16 பேரை போட்டியாளர்களாக விஜய் டிவி களமிறக்க போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X