»   »  ஒரு இளம்பெண்ணுக்கு இத்தனை கஷ்டமா?: புத்தம் புதிய டிவி தொடர் “அருந்ததி”

ஒரு இளம்பெண்ணுக்கு இத்தனை கஷ்டமா?: புத்தம் புதிய டிவி தொடர் “அருந்ததி”

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.01 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய தொடர் அருந்ததி.

இயற்கை எழில் கொஞ்சும் பூம்பொழில் கிராமத்தில் செல்வேந்திரன் அம்பிகா தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி பத்து வருடமாகியும் குழந்தைப் பேறு இல்லை. செல்வேந்திரன், அம்பிகா தம்பதியினருக்கு உடலில் எந்த குறைபாடும் இல்லை. இந்நிலையில், அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகில் இருக்கக் கூடிய மலையடிவாரத்தில், ஒரு பெரிய சித்தரின் ஜீவசமாதி இருப்பதை அறிந்து அங்கு சென்று மனமுருகி பிராத்தனை செய்து வர தொடங்கினர்.

Arundhati, a new TV serial to entertain you

அதன் பலனாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றனர். அந்த சித்தரின் அருளால் தான் தாங்களுக்கு இந்த கரு உண்டானது என்று மிகவும் சந்தோஷமடைந்த அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு அழகான பெண் குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் சங்கவி, இளையவள் காமினி... இதுவரை இருந்த மனக்குறை நீங்க மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

எல்லா பெண்களையும் போலவே சங்கவியும் கனவுகளும், கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் உள்ள ஒரு சராசரிப் பெண்ணாகவே வளர்ந்து வந்தாள். திருமணம் செய்யும் பருவத்தையும் அடைந்தாள். இந்த பெண்ணை மணக்க முன்வரும் ஒவ்வொரு ஆணும் மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். இதனால், அந்த ஊரில் சில அசம்பாவிதம் நடக்கிறது. இதனால் மனமுடைந்த செல்வேந்திரன் அம்பிகா தம்பதியினர் தன் மகள்களுடன் ஊரைவிட்டே போய்விட முடிவு செய்தனர். அதுவும் அவர்களால் முடியவில்லை. கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி அவளை அந்த ஊரைவிட்டு கிளம்பவிடாமல் தடுக்கிறது இதற்க்கு என்ன காரணம்? ஒரு பெண்ணை எத்தனைதான் இம்சிக்கலாம் விதி?

இது அத்தனைக்கும் விடை அந்த ஊரின் அரணாக விலங்கும் மலையின் ஓர் இருட்டறைக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட வருடங்களாக தனிமை தவத்தில் இருக்கும் சித்தரின் தவத்தை நாம் கலைத்தாக வேண்டும்.

சங்கவி என்ன செய்தாள், அவளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையை எப்படி அறிந்தாள், ஓர் எளிய கிராமத்து பெண்ணின் போராட்டம் கலந்த சாகச வாழ்க்கையை விவரிப்பதே இந்த தொடர்.

English summary
Arudhati, a new serial in Raj TV is here to entertain you.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil