Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்
சென்னை: தொலைக்காட்சியில் முதல்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் "100" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . செப்டம்பர் 19 முதல் வாரத்தின் ஏழு நாட்களும் இடைவிடாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களையும் வழங்கவிருக்கிறது.
தமிழகத்தின் முக்கிய பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அதன் பிரபல தொடர்களான பொம்மி B.A.B.L, இதயத்தை திருடாதே, அபி டெய்லர், சில்லுனு ஒரு காதல் ஆகியவற்றை வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 19-ந்தேதி முதல் கலர்ஸ் தமிழின் பார்வையாளர்கள் அவர்களுக்கு பிடித்த தொடர்களை இனி திங்கள் முதல் ஞாயிறு வரை புதிய நேரத்தில் பார்த்து மகிழலாம்.
டாக்டர்
வீரபாபு,கொரோனா
சமயத்தில்
பெரிதும்
பேசப்பட்டவர்
...
குழந்தைகளுக்கான
படம்
இயக்கி
உள்ளார்

முதல் முறையாக
உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் கலர்ஸ் தமிழ் அதன் பிரபல சன்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக அதர்வா நடித்து 2019-ம் ஆண்டில் வெளியான " 100 " திரைப்படத்தை செப்டம்பர் 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.

லட்சியமிக்க போலீஸ்காரன்
சாம் ஆன்டன் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் கதைக்களமானது ஒரு லட்சியமிக்க போலீஸ்காரரான சத்யாவை (அதர்வா) சுற்றி வருகிறது.

எதிர்பாராத திருப்பத்தை
காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் போலீஸ்காரரான அவர் அங்கு வரும் அவசர தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கிறார். இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து சத்யாவுக்கு ஒரு போன் வருகிறது. இறந்துவிட்டதாக கருதப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து போன் வந்ததால், அது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சத்யா குற்றவாளியை பிடித்து அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதையாகும்.

கன்னித் தீவு உல்லாச உலகம்
இது மட்டும் இன்றி மகிழ்ச்சியை மேலும் ஒரு படி உயர்த்தும் வகையில், நக்கலும் நையாண்டியும் நிறைந்த பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 - இல் இந்த வார சிறப்பு விருந்தினராக நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி பங்கேற்க இருக்கிறார். மன்னர் ஜல்சா மற்றும் அவரது தீவுவாசிகளுடன் இவரது நகைச்சுவை நிறைந்த உரையாடல் நிச்சயம் சிரிக்க வைக்கும்.

வார இறுதிக்கு
இவர்களுடன் நகைச்சுவை நடிகர் அமுதவாணனும் இந்த நிகழ்ச்சியில் தோன்றி மேலும் சிரிக்க வைக்க இருக்கிறார். இது செப்டம்பர் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.அன்றைய தினம் நண்பகல் 12 மணியில் இருந்து இடைவிடாத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்க இருப்பதால், உற்சாகமிகுந்த வார இறுதிக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.